முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சட்டமன்ற தேர்தல்: முதல்வர் அதிஷிக்கு எதிராக காங். வேட்பாளர் அறிவிப்பு

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      இந்தியா      அரசியல்
Adishi 2024-02-04

டெல்லி, டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் முதல்வர் அதிஷியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தலில் இணக்கமாக இருந்த காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி, டெல்லி தேர்தலில் எலியும் பூனையுமாக மாறி உள்ளது. எனவே ஆம் ஆத்மிக்கு ஒரு புறம் பா.ஜ.க. மறு புறம் காங்கிரஸ் களம் இரங்கி உள்ளனர்.

இந்நிலையில் ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் அதிஷி போட்டியிட உள்ள கல்காஜி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பா (வயது 49) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அல்கா லம்பா, அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் ஆவார். 2014-ம் ஆண்டில் காங்கிரசில் இருந்து வெளியேறிய அல்கா லம்பா ஆம் ஆத்மியில் இணைந்து 2015-ம் ஆண்டு தேர்தலில் சாந்தினி சவுக் தொகுதியில் வெற்றி பெற்றார்.

ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு கட்சிக்குள் அவமரியாதையை காரணம் காட்டி அவர் மீண்டும் காங்கிரசுக்கே திரும்பினார். ஆரம்பத்தில், கல்காஜியில் இருந்து போட்டியிட லம்பா தயங்கினார். தான் வெற்றி பெற்ற சாந்தினி சவுக்கில் போட்டியிடவே விரும்பினார். ஆனால் அங்கு ஏற்கனவே முதித் அகர்வால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எனவே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பின்னர், கல்காஜி தொகுதியில் போட்டியிட அல்கா லம்பா ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பொதுத் தேர்தலில் 51- கல்காஜி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளராக அல்கா லம்பா வேட்புமனு தாக்கல் செய்ய மத்திய தேர்தல் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்பின் பேசிய அல்கா லம்பா, ஆம் ஆத்மி மற்றும் அதிஷியை குறிவைத்தார். நான் முதலமைச்சருக்கு எதிராக போட்டியிடுவதாக நான் நினைக்கவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவாலே அதிஷியை தற்காலிக முதல்வர் என்று அழைத்தார், அதனால் அவருக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. கெஜ்ரிவால் மற்றும் அதிஷி இருவரும் அரசியலமைப்பு பதவியை பினாமியாக மாற்றி அதை அவமதித்துவிட்டனர் என்று விமர்சித்தார். கல்காஜி தொகுதி ஆம் ஆத்மிக்கு வலுவான கோட்டையாக இருந்து வருகிறது, 2020 தேர்தலில் அதிஷி 55,000 வாக்குகளைப் பெற்று இங்கு அமோக வெற்றியைப் பெற்றார்.

பா.ஜ.க.வின் தரம்பிர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஷிவானி சோப்ரா 5 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.இந்நிலையில் இந்த முறை கல்காஜி தொகுதியில் கடுமையான போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து