முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களின் தாலியை திருடுவதா? மத்திய அரசு மீது காங். விமர்சனம்

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      இந்தியா
Jairam-Ramesh- 2023-06--01

டெல்லி, பெண்களின் தாலியை மோடி தலைமையாலான மத்திய அரசு திருடுவதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வங்கிகளில் தாலியை வைத்து கடன் பெற்றுள்ள பெண்கள், கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய குடும்பங்கள் 3 லட்சம் கோடி அளவிலான தங்க நகை கடன் பெற்றுள்ள நிலையில், பொருளாதாரம் காரணமாக அதனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் குடும்பங்கள் உள்ளதாக புள்ளி விவரங்கள் வந்துள்ளன. வங்கிகளில் உள்ள வாராக்கடன்களில் தங்க நகைக்கடன் பங்கு மட்டுமே 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தங்கக் கடன் வாராக்கடன்கள் ஜூன் 2024 நிலவரப்படி 30 சதவீதம் உயர்ந்து ரூ.6,696 கோடியாக உயர்ந்துள்ளது. இது 3 மாதங்களுக்கு முன்பு ரூ.5,149 கோடியாக இருந்தது. கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையில், பெண்களின் தாலி உட்பட பல நகைகள் பறிபோகிறது. 

மத்திய அரசின் ஒழுங்கற்ற கொள்கை உருவாக்கமும், முன்னுரிமையை திசைதிருப்பி தவறானவற்றுக்கு அளிப்பதுமே இதற்கு முக்கிய காரணம். சுதந்திர இந்தியாவில் பெண்களின் தாலியை திருடும் ஒரே அரசாங்கம் என்ற கீழான தனித்துவத்தை தற்போதைய அரசு பெற்றுள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக மக்களவை தேர்தலின்போது பெண்களின் தாலியை காங்கிரஸ் திருடிவிடும் என்று மோடி பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து