முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோயில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரம்

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      ஆன்மிகம்
Sabarimala 2023-12-02

கேரளா, சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாத நிறைவையொட்டி கடந்த 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அன்றிரவு நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் வருகிற 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 30-ம் தேதி முதல் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளதால் அதற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகம் மும்முரமாகச் செய்து வருகிறது. சபரிமலைக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களும் அய்யப்பனைத் தரிசனம் செய்துவிட்டுப் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது என சபரிமலை நிர்வாக மாவட்ட நீதிபதி அருண் எஸ். நாயர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்போது தினசரி 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். மகரவிளக்கு விழாவின் ஒருபகுதியான திருவாபரணம் ஊர்வலம் வருகிற 12-ம் தேதி பந்தளத்திலிருந்து தொடங்குகிறது. விழாவை சுமுகமாக நடத்த அனைத்து அரசுத் துறைகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றது. பல்வேறு துறைகளின் ஆய்வுக்குப் பிறகு ஊர்வலத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஜனவரி 10-ஆம் தேதிக்குள் செய்து முடிக்கப்படும்.

மேலும், மகரவிளக்கு ஜோதியைக் காணப் பக்தர்கள் கூடும் முக்கிய இடங்களில் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர்  தலைமையில் காவல்துறை, காடுகள் மற்றும் சுகாதாரத்துறைகளின் ஒருங்கிணைப்புடன் ஆய்வு நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசல் ஏற்படாமல் இருக்க சபரிமலை முழுவதும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்படுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து