முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: 2 நாட்களில் ஒரு சவரன் விலை ரூ. 2,680 உயர்வு

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, தங்கம் விலை நேற்று (ஏப்.10) ஒரு பவுன் மீண்டும் ரூ.68,000-ஐ கடந்துள்ளது. இரண்டு நாள்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 2,680 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை அதிகரித்து, நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.67,280-க்கு விற்பனையானது. இந்நிலையில் 2-வது நாளாக இன்று பவுனுக்கு ரூ.1200 அதிகரித்துள்ளது. இதனால் இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2680 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு பவுன் ரூ.68,480-க்கு விற்பனையானது.  கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.102-க்கும் விற்பனையானது. 

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மார்ச் 16-ம் தேதி 22 காரட் ஒரு பவுன் தங்கம் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், தொடர்ந்து அதிகரித்து, கடந்த 3-ம் தேதி ரூ.68,480 என புதிய உச்சம் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 குறைந்தது. இதனால், சுபகாரியங்களுக்கு நகை வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் அந்த நிம்மதி நீடிக்காமல், தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் நேற்று 2 முறை அதிகரித்து, நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.67,280-க்கு விற்பனையானது. நேற்றும் நகை விலை உயர்ந்து விற்பனையானது. இரண்டு நாள்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 2,680 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு குறிப்பாக சீனா மீதான அதிக வரி விதிப்பு தான் தங்கம் விலை உயர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பை பல்வேறு நாடுகளுக்கும் தற்காலிகமாக நிறுத்திவைத்தாலும் கூட சீனாவுக்கு 125 சதவீதம் வரி விதித்துள்ளார். ட்ரம்ப் அறிவிப்பால் உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வந்தாலும் கூட அமெரிக்காவில் கடன் பத்திரங்களின் விற்பனை சுணக்கம் கண்டுள்ளது. அமெரிக்க கடன் பத்திரங்கள் மீது உலகளவில் இரண்டாவது பெரிய முதலீடு செய்த நாடாக சீனா இருக்கிறது. ட்ரம்ப்பின் 125 சதவீத வரி விதிப்பால் சீனா அமெரிக்காவில் உள்ள கடன் பத்திரங்களை விற்றுவிட்டு தங்கத்தின் மீதான முதலீட்டில் கவனத்தை திருப்பியுள்ளது. இதனால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் தொடரும் என்றே கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து