முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொந்த மைதானத்தில் அதிக தோல்வி: ஆர்.சி.பி. மோசமான சாதனை

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      விளையாட்டு
RCB 2024-03-20

Source: provided

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி திடலில் அதிக தோல்விகளைச் சந்தித்து ஆர்.சி.பி. அணி மோசமான சாதனையை படைத்துள்ளது.

 அதிகபட்ச தோல்வி...

நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் முதலிரண்டு போட்டிகளில் கொல்கத்தா, சென்னை ஆகிய அணிகளை வெற்றி கொண்ட ஆர்.சி.பி., உள்ளூர் திடலில் நடைபெற்ற போட்டியில் குஜராத்திடம் தோல்வியைத் தழுவியது. பின்னர், மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பையை வென்று சாதனை படைத்த அடுத்த போட்டியே டில்லிக்கு எதிராக தோல்வியடைந்து. 

மோசமான சாதனை...

வெளியே நடைபெற்ற 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள ஆர்.சி.பி. அணி, சொந்த திடலில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியையேத் தழுவியிருக்கிறது. சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி. அணியின் 45-வது தோல்வி இதுவாகும். இது ஒரு அணியின் சொந்த மைதானத்தில் பெற்ற அதிகபட்ச தோல்வியாகும்.

அடுத்ததாக டில்லி, கொல்கத்தா...

பெங்களூருவுக்கு அடுத்தபடியாக டில்லி கேப்பிடல்ஸ் அணி அருண் ஜெட்லி மைதானத்தில் 44 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இவர்களுக்கு அடுத்ததாக நடப்பு சாம்பியன் கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் 38 போட்டிகளில் தோல்வியடைந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து