முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.சி.பி. தோல்விக்கு காரணம்: தினேஷ் கார்த்திக் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      விளையாட்டு
Bhuvneshwar-Kumar 2024-04-1

Source: provided

பெங்களூரு : பெங்களூரு பிட்ச் பேட்டர்களுக்கு அவ்வளவாக உதவவே இல்லை என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சொந்த மண்ணில் தோல்வி...

சின்னசாமி திடலில் நடைபெற்ற ஐபிஎல்-இன் 24ஆவது போட்டியில் ஆர்.சி.பி.யும் டில்லி கேபிடல்ஸும் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி. 163/7 ரன்கள் எடுக்க, டில்லி கேபிடல்ஸ் 17.5 ஓவர்களில் 169/4 ரன்கள் எடுத்து வென்றது. டில்லி அணியில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவரது கொண்டாட்டமும் சமூக வலைதளத்தில் வைரலானது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆர்.சி.பி. தோல்வியடைந்துள்ளது.

கடினமான பிட்ச்...

இது குறித்து ஆர்.சி.பி. அணியின் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் கூறியதாவது: முதலிரண்டு போட்டிகளில் நாங்கள் நல்ல பிட்ச்சுகள் வேண்டுமெனக் கேட்டோம். ஆனால், இப்படி பேட்டிங் ஆடவே கடினமாக இருக்குமாறு தந்துவிட்டார்கள். அதனால், எங்களால் என்ன சிறப்பாக செயல்பட முடியுமோ அதைச் செய்தோம். ஆனால், நாங்கள் சின்னசாமி பிட்ச் மேற்பார்வையாளரிடம் இது குறித்து பேசுவோம். அவர் தனது வேலையை சிறப்பாக செய்வாரென நம்புகிறோம்.

டில்லிக்கு சாதகம்...

இந்த பிட்ச் பேட்டர்களுக்கு அவ்வளவாக உதவவே இல்லை. இது மிகவும் சவாலான பிட்ச். நாங்கள் விளையாடிய 2 போட்டிகளிலும் இதுதான் நிலைமை. முதல் நான்கு ஓவரிலிருந்து 13ஆவது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம். பேட்டிங்கில் நாங்கள் தடுமாறினோம். இருந்தும் ஓரளவுக்கு நல்ல இலக்கை நிர்ணயித்தோம். டில்லி அணி 50/4 என இருந்தார்கள். தூரல் வந்தத்தால் டில்லி பேட்டிங்கிற்கு சாதகமானது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து