முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு: மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல்

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      தமிழகம்
Amit-Shah 2023-11-17

Source: provided

சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த அண்ணாமலைக்கு, விரைவில் கட்சியின் தேசிய பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, பா.ஜ.க.வின் வளர்ச்சிக்காக பல்வேறு தீவரி முயற்சிகளை மேற்கொண்டுவந்தார். தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியை விரும்பும் பா.ஜ.க. தலைமை அண்மையில், அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமியை டெல்லி தலைமை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. அடுத்த ஒரு வாரத்தில், சென்னை வரவிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்றும், ஏப்ரல் 11ஆம் தேதி தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வந்தன.

சொன்னபடி, தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு நேற்று விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியானது. பா.ஜ.க. எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்ய, முக்கியத் தலைவர்கள் பத்து பேர் மனுவை முன்மொழிந்திருந்தனர். அவர் ஒருவர் மட்டுமே விருப்பமனு அளித்தநிலையில் தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாகத் தேர்வாவது உறுதியாகிவிட்டது.

அதனை உறுதி செய்யும் வகையில் அமித் ஷா தன்னுடைய எக்ஸ் பதிவில், தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் அவர்களிடமிருந்து மட்டுமே விருப்பமனு பெறப்பட்டுள்ளது என்று பதிவிட்டிருந்தார். மேலும் அண்ணாமலையின் பணியை பாராட்டும் வகையில், தமிழ்நாடு பா.ஜ.க. பிரிவின் தலைவராக, அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகள் பல செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு முன்மாதிரியாக விளங்குகிறது. எனவே, பா.ஜ.க. தலைமை, அண்ணாமலையின் தலைமை நிர்வாகத் திறன்களை தேசிய அளவில் பயன்படுத்திக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து