முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுடன் அவசர கதியில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது : மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      இந்தியா
peaus-Ghoyal 2023-07-20

Source: provided

புதுடெல்லி : இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை அழுத்தத்தின் பேரில் துப்பாக்கி முனையில் நடத்துவது போல் அவசர கதியில் நடத்த முடியாது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், “வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தையில் உள்ளது. ஆனால் இதில் தேசத்தின் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். எந்தச் சூழலிலும் அழுத்தத்தின் பேரில் பேச்சுவார்த்தை நடக்காது. நான் இதை பல்வேறு தருணங்களிலும் வலியுறுத்திக் கூறியுள்ளேன். துப்பாக்கி முனையில் எல்லாம் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்ட காலக்கெடு நிர்ணயிப்பது என்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் அதற்காக நம் முடிவை துரிதப்படுத்த அவர்கள் அழுத்தம் தர முடியாது. நாட்டு மக்களின் நலனே பிரதானம். அதை பாதுகாக்கும் வகையிலேயே முடிவுகள் எட்டப்பட வேண்டும். அவசரம் எதிலும் நல்லதல்ல. 

இந்தியாவே பிராதனம் என்ற கொள்கையின் படி பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன. அகண்ட பாரதம் 2047 இலக்குக்கு ஏற்றவாறு அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்” என்றார்.  அவசரத்துக்கு தயார்.. முன்னதாக, டெல்லியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “அமெரிக்காவின் சமீபத்திய வரிகள், நாம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்களில் நமது மனதை ஒருமுகப்படுத்தியுள்ளது. மேற்கத்திய பொருளாதாரங்களுடன் தடையற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான நமது ஒத்துழைப்பை நாம் வளர்க்க வேண்டும்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்த முடிந்தால், இவை இந்த ஆண்டு நமக்கு சாதகமாக அமைந்தால், நாம் வேறு சூழ்நிலையில் இருப்போம். இந்த ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் இந்தியா அதிக அவசரத்துக்கு தயாராக உள்ளது.” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் வெளியுறவு அமைச்சரின் கருத்துக்கு நேரெதிராக அவசரம் தேவையில் தேசத்தின் நலனே பிரதானம் என்று வர்த்தக அமைச்சர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து