முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடு, வாகனங்கள் கடன் வட்டியை குறைக்க வங்கிகள் நடவடிக்கை

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      இந்தியா
RBI 2023-04-27

Source: provided

மும்பை :  ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவித்ததையடுத்து கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் அடுத்தடுத்து குறைக்கத் தொடங்கியுள்ளன. இந்த நடவடிக்கை வீடு, வாகன கடன் வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, இந்தியன் வங்கி ரெப்போவுடன் இணைந்த கடனுக்கான வட்டி விகிதத்தை (ஆர்பிஎல்ஆர்) 9.05 சதவீதத்திலிருந்து 8.7 சதவீதமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. குறைக்கப்பட்ட இந்த வட்டி விகிதம் நேற்றுமுன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பஞ்சாப் நேஷனல் வங்கியும் தனது ஆர்எல்எல்ஆர் வட்டி விகிதத்தை 9.1 சதவீதத்திலிருந்து 8.85 சதவீதமாக குறைத்துள்ளது. இது, ஏப்ரல் 10-ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

பேங்க் ஆப் இந்தியா ஆர்.பி.எல்.ஆர். கடன் வட்டி விகிதத்தை 9.1 சதவீதத்திலிருந்து 8.85 சதவீதமாக குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட இந்த வட்டி விகிதம் ஏப்ரல் 9-ம் தேதியிலிருந்து அமலாகியுள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பதற்கு பணவியல் கொள்கை குழு ஒருமனதாக ஒப்புதல் தெரிவித்தது. இதனால், வங்கிகளிடையே பணப்புழக்கம் அதிகரித்து வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டியில் கடன்பெறுவதற்கு வழிஏற்படும் என்பது ரிசர்வ் வங்கியின் கணிப்பு. ரெப்போ வட்டி விகிதத்தின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி ஏற்கெனவே வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து