பாங்காக்கில் உள்ள புளோட்டிங் மார்க்கெட் என மிதக்கும் சந்தை அருகே குண்டு குரங்கு ஒன்றை கண்ட வனவிலங்கு அதிகாரிகள் அதன் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். குண்டு அங்கிள் என்ற பெயர் வைத்து, 15 கிலோவாக இருக்கும் அதன் எடையை குறைக்க டயட்டை பின்பற்றச் சொல்லி, தினமும் ஓட வைத்து பயிற்சி கொடுக்கிறார்களாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகின் மிகப்பெரிய பதிப்பக நிறுவனமான ஹார்ப்பர் கோலின்ஸ், தனது இந்திய கிளைகளில் பணியாற்றுபவர்களுக்கு, செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்காக, சம்பளத்துடன் கூடிய விடுமுறையை (ஐந்து நாட்கள்) அனுமதித்துள்ளது. மேலும், நொய்டாவில் உள்ள அலுவலகத்தில் செல்லப்பிராணிகளை அழைத்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கை குலுக்கும் நோக்கம் என்ன வென்றால் கையில் எந்த ஆயுதமும் இல்லை மற்றும் சமாதானத்தின் சைகை என்று கூறப்படுகிறது.நவீன காலத்தில், கைகுலுக்குவது வாழ்த்துக்களில் இருந்து நன்றி தெரிவிக்கும் செயல் வரை வெளிப்படுத்தும் செயலாக இருக்கிறது. நியூஜெர்ஸி முன்னாள் மேயர், ஜோசப் லாசராவ், 1977 ல், ஒரே நாளில் 11,000 கை குலுக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
உலகின் முதல் முழு நீள அனிமேஷன் சினிமா எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா.. நாம் அனைவரும் யூகிப்பது போல அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட்டிலோ.. இங்கிலாந்திலோ அல்ல. மாறாக உலகின் முதல் முழு நீள அனிமேஷன் திரைப்படம் அர்ஜென்டினாவில் தயாரிக்கப்பட்டது. El Apóstol என்று பெயரிடப்பட்ட அரசியல் நகைச்சுவை படமாக இந்த படம் 1917 இல் தயாரிக்கப்பட்டது. 70 நிமிடங்கள் கொண்ட அப்படத்தை Quirino Cristiani என்ற இத்தாலியர் அப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், பெரும்பாலும் 1937 இல் வால்ட் டிஸ்னியால் எடுக்கப்பட்ட Snow White and the Seven Dwarfs என்ற படத்தையே முதன்முதலாக எடுக்கப்பட்ட முழு நீள அனிமேஷன் படம் என பெரும்பாலானோர் கருதிக் கொண்டிருக்கின்றனர். மேலும் அந்த அர்ஜென்டினா படம் கின்னஸிலும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நகரத்தில் வாகனம் ஓட்டுவது நரகத்தை விட கொடுமையானது. அதிலும் போக்குவரத்து சிக்னலுக்காக நிற்கும்போது ஏற்படும் அழுத்தம் சொல்லி மாளாது. புதிய ஆய்வு ஒன்றில் ஒவ்வொரு மனிதரும் தனது வாழ்நாளில் சராசரியாக 6 மாதங்களை சிக்னலில் காத்திருக்கும் போது செலவிடுவதாக தெரியவந்துள்ளது. பயண நேரத்தில் 20 சதவீதம், அதாவது 75 விநாடிகளை சிவப்பு சிக்னலில் செலவாகிறது.
இந்தியாவின் புகழ் பெற்ற சமையல் நிபுணர்களில் ஒருவரான விஷ்ணு மனோகர் தொடர்ந்து 57 மணி நேரம் சமைத்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். நாக்பூரில் 52 மணி நேரத்தை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தச் சாதனை முயற்சியில் 57 மணி நேரம் வரை தொடர்ந்து சமைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
எனக்கு தொழில் ரொமான்ஸ் விமர்சனம்
25 Nov 2024அசோக் செல்வன் தற்பொழுது எனக்குத் தொழில் ரொமான்ஸ் படம் மூலம் மீண்டும் களத்தில் குதித்து இருக்கிறார்.