ஃபாரடே நிருவனத்தின் இந்த அதிவேக காருக்கு FF 91 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சக்தி வாய்ந்த 1050 ஹார்ஸ்பவர் என்ற என்ஜின்கள் பொருத்தப்படவுள்ளது. இதனால், இந்த காரானது, 2.40 வினாடிகளில் 0-100கி.மீ. வேகத்தை தொட்டுவிடும். 375 மைல்களை அசத்தலாக இது கடக்க கூடியது. இந்த மாடல் கார்களில் முகம் மூலம் அடையாளம் காணும் (face recognition)ஆப் பொருத்தப்பட்டுள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஒற்றை தலைவலி வருவதற்கு மோசமான வாழ்க்கை முறையே காரணம். ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபட ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, அத்துடன் சிறிது கல் உப்பை சேர்த்து நன்கு கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒற்றை தலைவலியின் போது குடித்தால், சில நிமிடங்களில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தி பெவர்லி ஹில்ஸ் என்ற நிறுவனம் தான் பெவர்லி ஹில்ஸ் 90H2O டயமண்ட் எடிசன் என்றழைக்கப்படும் தண்ணீர் பாட்டில் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. தெற்கு கலிபோர்னியா மலையின் 5000 அடி உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த பகுதியில் கிடைக்கும் தண்ணீர் தான் உலகின் மிகவும் சுத்தமான தண்ணீராம். உடலுக்கு நன்மை தரும் பல வேதிப்பொருட்கள் இதில் இருப்பதாக கூறப்படுகிறது . அதோடு இந்த தண்ணீர் பாட்டிலின் மூடியில் 600 வெள்ளைநிற வைரங்களும் 250 கருப்புநிற வைரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தமாக14 கேரட் வைரம் அதில் உள்ளது . இந்த தண்ணீர் பாட்டிலின் விலை 65 லட்சம் ரூபாய்($100,000). இதுவரை 9 டைமென்ட் எடிசன் வாட்டர் பாட்டில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த டயமண்ட் எடிசன் பாட்டிலுடன் நான்கு விலை உயர்ந்த கிரிஸ்டல் டம்ளர்கள் இலவசமாக வழங்கப்படுகிறது என்கிறார் இந்நிறுவன தலைவர் ஜான் கேப். அம்மாடியோவ்..
குழந்தைகள் வீட்டில் தூங்குவதை விட, கார் பயணங்களில் இயல்பாகவே உறங்கிவிடும். இந்த வழக்கத்தை வைத்து குழந்தைகளுக்கென நவீன படுக்கை ஒன்றை கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு உருவாக்கியுள்ளது. வீட்டில் எந்தவித தொந்தரவுமின்றி குழந்தைகள் உறங்க இது உதவுகிறது. மேக்ஸ் மேட்டார் ட்ரீம்ஸ் க்ரிப் என்ற பெயரில் அந்நிறுவனம் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான இந்தத் தொட்டிலில் பல தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன. தெருவிளக்குகள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் எல்.இ.டி விளக்குகள், காரின் ஒலியை மிமிக் செய்யக்கூடிய அமைப்புகள் இந்த நவீனத் தொட்டிலில் உள்ளன. குழந்தை எதுபோன்ற பயணத்தில் உறக்கத்தை எட்டும் என்பதை பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லத்தீன் மொழியில் ஆஸ்திரேலிஸ் என்றால் தெற்கில் உள்ள தெரியாத பகுதி என்று பொருள். பண்டைய ரோமானியர்கள் வாழ்ந்த காலத்தில் ஆஸ்திரேலியா சென்றடைய வழி கண்டறியப்படாத காரணத்தாலும், கடல் வழி தெரியாததாலும் இப்பெயர் வைத்தனர். ஆஸ்திரேலிஸ் என்பது காலப்போக்கில் ஆஸ்திரேலியா என்றானது.
சந்திரகுப்த மௌரியரின் முதன்மை அமைச்சராகவும், வழிகாட்டியாகவும் இருந்து, மிகப்பெரிய மௌரிய பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர் தான் சாணக்கியர். இவர் படிப்பை பழம்பெரும் தக்ஷஷீலா பல்கலைகழகத்தில் முடித்தார். உலகிலேயே மிகச்சிறந்த பாடசாலையாக இருந்த இந்த இடம் தற்போது பாகிஸ்தானில் அமைந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
கோலி சிக்சர்: வீடியோ வைரல்
24 Nov 2024இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024