முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்லோவாக்கியா பாராளுமன்ற தேர்தல்: மீண்டும் வெற்றி பெற்றார் மாஜி அதிபர்

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      உலகம்
Slovakia 2023-10-02

Source: provided

பிராடிஸ்லாவா : கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள சிறிய நாடுகளின் ஒன்றான ஸ்லோவாக்கியாவில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த நாட்டின் மாஜி அதிபரே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். 

கடந்த 1993-ல் செக்கோஸ்லோவாக்கியா பிரிவினைக்கு பிறகு உருவான சிறிய நாடு ஸ்லோவாக்கியா. அதன் மக்கள் தொகை சுமார் 55 லட்சம். கடந்த மே மாதத்திலிருந்து அங்கு காபந்து அரசு ஆட்சி செய்து வந்தது. சமீபத்தில் அங்கு பொதுத்தேர்தல் நடந்த நிலையில் அதில் மாஜி அதிபரும் இடதுசாரி ஸ்மெர் கட்சி தலைவருமான ராபர்ட் பிகோ வெற்றி பெற்றுள்ளார். 

கடந்த 2018-ல் அவரது ஆட்சியில் நடந்த ஊழல்களை பகிரங்கமாக வெளிப்படுத்தியதாக பத்திரிக்கையாளர் குசியாக் என்பவரை கொன்ற வழக்கில் அதிபர் பதவியிலிருந்து அவர் விலகினார். முந்தைய ஆட்சிகளில் ரஷ்யா, உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஸ்லோவாக்கியா ராணுவ உதவியை அளித்தது. போர் அகதிகளாக வரும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவும் அளித்தது. 

இந்த நிலையில் ராபர்ட் பிகோ தான் வென்றால் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவும், அமெரிக்க எதிர்ப்பும், உக்ரைனுக்கு ராணுவ உதவியை நிறுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து