முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

புதன்கிழமை, 26 ஜூன் 2024      இந்தியா
Brajwal-Revanna 2024-05-15

பெங்களூரு, பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் எச்.டி.ரேவண்ணா. இவரது மனைவி பவானி ரேவண்ணா. இவர்களது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா. பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார். அவர் தற்போது ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரால் பாதிக்கப்பட்ட மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகரைச் சேர்ந்த பெண்ணை கடத்தியதாக எச்.டி.ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர்.

தற்போது அவர் ஜாமினில் இருந்து வருகிறார். அதுபோல் இந்த வழக்கில் அவரது மனைவி பவானி ரேவண்ணாவும் முன்ஜாமீன் பெற்றுள்ளார். இந்நிலையில், பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் பிரஜ்வால் ரேவண்ணா ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடினார். இந்த மனு மீதான விசாரணை இன்று பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரஜ்வால் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல் வழக்கில் இன்னும் ஜாமீன் கிடைக்காத நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஆபாச வீடியோ, பாலியல் தொல்லை, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் ஆகிய 4 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து