முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடும்: ஜோஸ் பட்லர்

புதன்கிழமை, 26 ஜூன் 2024      விளையாட்டு
England 2024-02-16

Source: provided

கயானா : இந்தியா இந்த முறை ஆக்ரோஷமாக விளையாட போகிறது என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான...

டி20 உலகக்கோப்பை தொடரில் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கும், 2வது அரையிறுதி ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கும் தொடங்குகிறது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் கயானா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து இங்கிலாந்து கேப்டன் பட்லர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, நாங்கள் இந்த முறை வித்தியாசமான இந்திய அணிக்கு எதிராக விளையாடப் போகிறோம். இந்தத் தொடரில் ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் விதம், மற்றும் அவர் அணியை வழிநடத்தும் விதம் ஆகியவை சிறப்பாக இருக்கிறது.

ஆக்ரோஷமாக... 

மேலும் இந்திய அணி மிகவும் சுதந்திரத்துடன் மிகவும் ஆக்ரோஷமாக இருக்க முயற்சிக்கின்றனர். 2022ஆம் ஆண்டு இந்திய அணியின் தோல்விக்கு பிறகு, இந்திய அணி மாற்றங்களை செய்துள்ளது. இது கடந்த 2023ஆம் ஆண்டு உலக கோப்பையிலும் எதிரொலித்தது. இந்தியா இந்த விளையாட்டு பாணியில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்தியா இந்த முறை ஆக்ரோஷமாக விளையாட போகிறது. அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். இங்கிலாந்தும் ஆக்ரோஷமான முறையிலேயே விளையாடும். கடந்த உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது மிகவும் சிறப்பான நாள். அது சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகும். அதுவும் குறிப்பாக சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்து வெளியேறியது, சிறந்த தருணங்களில் ஒன்று. முக்கியமாக நாங்கள் ஒரு நல்ல தொடக்கத்தினை பெற்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து