முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளுகுளு சீசன்: குற்றால அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      தமிழகம்
Kurdalam 2023 06 20

Source: provided

தென்காசி : குற்றால அருவிகளில் சீரான அளவில் தண்ணீர் கொட்டுவதால் நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.  

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு வரும் குற்றாலம் அருவிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.

அப்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு ஆர்வம் காட்டுவார்கள். தற்போது குற்றாலத்தில் சீசன் தொடங்கி உள்ள நிலையில் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. 

இதனால் உள்ளூர் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளிக்க குவிந்து வருகின்றனர். பொதுவாக வார இறுதி நாட்களில் அருவிகளில் கூட்டம் அலைமோதும். 

அதன்படி நேற்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இருப்பினும் நேற்று காலை முதல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

நேற்று முன்தினம் காலை முதல் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெயில் சுட்டெரித்த நிலையில் பிற்பகலுக்கு மேல் குளிர்ந்த காற்றுடன் மிதமான சாரல் மழை பரவலாக பெய்தது. 

இதனால் குளிர்ந்த காற்றுடன் ரம்மியமான சூழ்நிலை நிலவுவதால் சீசனை அனுபவிக்க வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு குளுகுளு சீசன் நிலவுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 5 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து