முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமியின் கரு கலைப்பு தொடர்பான வழக்கு: அலகாபாத் ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      இந்தியா
Allahabad-High-Court 2023-1

லக்னோ, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, 32 வார கருவை வயிற்றில் சுமந்திருக்கும் 15 வயது சிறுமியின் கரு கலைப்பு தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், 'கரு கலைப்பு பெண்ணின் முடிவுக்குட்பட்டது' என தீர்ப்பு அளித்துள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15வயது சிறுமியின் 32 வார கருவை கலைப்பதற்கு அனுமதி கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிறுமி தனது தாய் மாமா வீட்டில் வசித்து வந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சேகர் மற்றும் மஞ்சீவ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

கருவை சுமந்து குழந்தையை பெற்று எடுப்பது அல்லது கருவை கலைப்பது சிறுமியின் முடிவை சார்ந்தது. கருவை சுமந்து குழந்தையை சிறுமி பெற்று எடுத்த, பின் அக்குழந்தையை தத்து கொடுக்க விரும்பினால், சிறுமி மற்றும் குழந்தையின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். குழந்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெறுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் சிறுமியின் கருவை கலைத்தால், ஏற்படும் பிரச்னைகள் குறித்து பெற்றோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இறுதியில் சிறுமியின் பெற்றோரும் கர்ப்பத்தைத் தொடர ஒப்புக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து