முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை: மேட்டூர் அணையின் நீர்வரத்து 20,505 கனஅடியாக அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Cauvery 2023 06 07

Source: provided

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து 20,505 கன அடியாக அதிகரித்துள்ளது. 

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. மேலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் உபரிநீர் அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வரை தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. 

இதன் காரணமாக மேட்டூர் அணை கடந்த 30-ம் தேதி 120 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் மேட்டூர் அணையில் இருந்து 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இந்த நிலையில் கர்நாடகாவில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரும் குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆனாலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.

இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீரும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 9-ம் தேதி வினாடிக்கு 5258 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் 6548 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.

நேற்று காலை அது வினாடிக்கு 20 ஆயிரத்து 505 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 119.65 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கரையோர பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து