முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு பொதுவெளியில் தோன்றிய இளவரசி கேத் மிடில்டன்

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      உலகம்
Kate-Middleton

Source: provided

லண்டன் : புற்றுநோய்க்கான ஹீமோதெரபி சிகிச்சையை நிறைவு செய்த இளவரசி கேத் மிடில்டன் சமீபத்தில் தனது அரச கடமைகளை மீண்டும் தொடங்கினார்.

இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனுக்கு (வயது 42) கடந்த ஜனவரி மாதம் வயிற்று பகுதியில் ஆபரேசன் செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் பொதுவெளியில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார். இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு யூகமான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் அவர் ஒரு வீடியோ வெளியிட்டு, தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தார். வயிற்றுப்பகுதியில் செய்யப்பட்ட ஆபரேசனுக்கு பிறகான சோதனையின்போது புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், குடும்பத்தின் நலன் கருதி அதனை வெளிப்படையாக சொல்லவில்லை என்றும் கூறியிருந்தார்.

புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதால் கேத் மிடில்டன் இந்த ஆண்டு முழுவதும் பொதுவெளியில் தலைகாட்ட மாட்டார் என்றும் தகவல் வெளியானது. பூரணமாக குணமடைந்து மருத்துவக் குழு அனுமதித்தால் அவர் அரச கடமைகளுக்கு திரும்புவார் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இளவரசி கேத் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு முதல் முறையாக நேற்று பொதுவெளியில் தோன்றினார். இளவரசி கேத் மிடில்டன் தன் கணவர் இளவரசர் வில்லியம், மன்னர் சார்லஸ், ராணி கமிலா ஆகியோருடன், ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டுக்கு அருகில் தேவாலய சேவையில் கலந்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை தி சன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இளவரசர் கார் ஓட்ட, பின் இருக்கையில் இளவரசி கேத் மிடில்டன் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து