முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்களுக்கு ஆவினின் ஹலால் நெய்: வதந்தி என அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம்

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      தமிழகம்
Aavin logo

சென்னை, கோவில்களுக்கு ஆவினின் ஹலால் நெய் வழங்கப்படுவதாக வெளியான தகவல் வதந்தி என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கமளித்துள்ளது.

திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் அதிக அளவில் கலப்படம் செய்திருப்பதாகவும், விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசியலிலும் கடும் புயலை கிளப்பியிருக்கிறது. 

இதைத் தொடர்ந்து பழனி கோவிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்படுவதாக வதந்தி பரவியது. இதற்கு பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்துதான் பெறப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் தற்போது ஆவினின் ஹலால் நெய்யை கோவில்களுக்கு வழங்குவதாக வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், 'இந்த ஹலால் நெய்யை தான் ஆவின் கோவில்களுக்கும் விற்பனை செய்கிறது' என்று கூறி ஆவினின் சமையல் பட்டர் பாக்கெட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் வதந்தியே. 

ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகள் 15-க்கும் மேற்பட்ட அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மட்டுமே ஹலால் முத்திரை இடம்பெறும். தமிழ்நாட்டில் விற்கப்படும் ஆவின் தயாரிப்புகளில் ஹலால் முத்திரை இடம்பெறாது. இப்புகைப்படத்தை வைத்து கடந்த சில ஆண்டுகளாகவே வதந்தி பரப்பி வருகின்றனர்" என்று விளக்கமளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து