முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் சம்பவம்: 18 ஆண்டுகளாக பக்கத்து வீட்டின் மின் கட்டணத்தை செலுத்திய நபர்

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      உலகம்
EB 2024-03-23

கலிபோர்னியா, அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள வாகவில் என்ற நகரத்தில் வசிக்கும் ஒருவர், 18 ஆண்டுகளாக தனது அண்டை வீட்டாரின் கட்டணத்தை செலுத்தி வந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனி வாடிக்கையாளர் கென் வில்சன் தனது மின்சாரக் கட்டணம் அதிகரித்து வருவதை கவனித்தார். அதனால் அவர் தனது மின் நுகர்வை குறைக்க நடவடிக்கை எடுத்தார். அந்த முயற்சிகளால் மாற்றம் ஏற்படுத்தாததால், அவர் மேலும் விசாரிக்க முடிவு செய்தார்.

வில்சன் தனது மின்சார பயன்பாட்டைக் கண்காணிக்க ஒரு சாதனத்தை வாங்கினார். மேலும் அதன் பிரேக்கர் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் அவரது மீட்டர் தொடர்ந்து இயங்குவதை கண்டுபிடித்தார். வில்சன் பின்னர் இந்த பிரச்சனை பற்றி பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனியை தொடர்பு கொண்டு, ஆய்வுக்கு ஒருவரை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.

அவர்களது விசாரணையில், வாடிக்கையாளரின் அபார்ட்மெண்ட் மீட்டர் எண்ணிற்கு மற்றொரு அபார்ட்மெண்டிற்கான மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கண்டறியப்பட்டது, ஒருவேளை 2009-ம் ஆண்டு முதல் இருக்கலாம் என்று பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனி தெரிவித்தது.அந்த நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டது மற்றும் ஏற்பட்ட சிரமத்திற்கு வில்சனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து