முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம்

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      சினிமா
Kozhipanni-Chelladurai-revi

Source: provided

கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையால் சிறுவயதில் நாயகன் ஏகனும், அவரது தங்கையும் கைவிடப்படுகிறார்கள். ஆதரவளித்த பாட்டியும் இறந்துவிட, அவர்களுக்கு கோழிப்பண்ணை நடத்தும் யோகி பாபு அடைக்கலம் கொடுக்கிறார்.

பெற்றோர் இல்லாத குறை தெரியாமல் தங்கையை வளர்க்க நினைக்கும் நாயகன் ஏகனின் வாழ்க்கையில் புது புது உறவுகள் வருகிறார்கள் அதே போல் பிரச்சனைகளும் வந்த வண்ணம் உள்ளன... கோழிப்பண்ணை செல்லதுரை’. என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஏகன், அசல் கிராமத்து இளைஞராக வலம் வருகிறார்.

அதிலும், பாசம், காதல், சோகம் ஆகிய அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.  யோகி பாபு தனது வழக்கமான காமெடியை ஒதுக்கி வைத்து விட்டு, அழுத்தமான குணசித்திர பாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார்.

நாயகி பிரிகிடா,  தங்கையாக வரும் சத்யாதேவி, ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவக்குமார் உள்ளிட்ட அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

தனது ஒவ்வொரு படங்களிலும் மனித உணர்வுகள் பற்றி பேசி வரும் இயக்குநர் சீனு ராமசாமி, இந்த படத்தில் அண்ணன் தங்கை பாசத்தை கரைத்து தெளித்து இருப்பதற்க்கா அவருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து