முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் பயங்கரம்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 4 பேர் பலி

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      இந்தியா
Maharashtra 2024-03-23

மும்பை, மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே 50 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையின் வளைவில் திரும்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் அங்கிருந்த 30 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதற்கிடையே, அப்பகுதி மக்கள் பஸ்சில் இருந்தவர்களை ஜன்னல் வழியாக பத்திரமாக வெளியே மீட்டனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து