முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது : பிரசாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      இந்தியா
Rahul 2024-05-12

Source: provided

காஷ்மீர் : ஜம்மு காஷ்மீரில் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர், சூரன்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி பேசியதாவது:- ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற மாநிலங்களில் பாஜக-ஆர்.எஸ்.எஸ். மட்டுமே வெறுப்பையும் வன்முறையையும் பரப்புகிறது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வெறுப்பைப் பரப்புவதுதான். வெறுப்புக்கு பதில் வெறுப்பு அல்ல, அன்பைக் கொண்டு வெறுப்பை வெல்லலாம்; பிரதமர் நரேந்திர மோடியின் உளவியலை நாம் அன்பினால் உடைத்துள்ளோம்.

எதிர்க்கட்சிகள் எதைச் செய்ய வேண்டுமோ, அதை நாங்கள் செய்து வருகிறோம். ஆளுங்கட்சியினர் ஒரு சட்டத்தை கொண்டு வருகிறார்கள்; அதற்கு எதிராக நாம் வலுவாக நிற்கும்போது சட்டம் நிறைவேற்றப்படாமல் புதிய சட்டத்தை கொண்டு வருகிறார்கள். இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு, மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதே காங்கிரசின் முதன்மையான கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து