முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி போட்டியில் விலகல்: ரோகித் சர்மா முடிவு குறித்து பும்ரா, ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      விளையாட்டு
Bumra 2023-09-08

Source: provided

சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் முடிவு குறித்து வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் இருவரும் பேசியுள்ளனர்.

ஷுப்மன் கில்....

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் (ஜனவரி 3) தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவின் பார்ம் மீதான விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். இந்திய அணியை வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக வழிநடத்துகிறார்.

தலைமைப் பண்பை... 

சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடாத நிலையில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இருவரும் அவரது இந்த முடிவு குறித்து பேசியுள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா பேசியதாவது: எங்களது கேப்டன் அவரது தலைமைப் பண்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவரது இந்த முடிவு அணியில் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது என்றார்.

ரிஷப் பந்த் பேசியதாவது...

இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். ரோகித் சர்மா எங்களுடைய கேப்டன். ஆனால், இது அணி நிர்வாகத்தின் முடிவு. அணி நிர்வாகத்தின் இந்த முடிவில் ரோகித் சர்மாவும் சம்பந்தப்பட்டுள்ளார். அவரது முடிவு குறித்து இதற்கு மேல் கூறுவதற்கு ஒன்றுமில்லை என்றார். கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோகித் சர்மா வெறும் 31 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து