முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குவாதத்தில் கான்ஸ்டாஸ்: பதிலடி கொடுத்த பும்ரா

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      விளையாட்டு
Bumra 2023 08 18

Source: provided

சிட்னி : இந்திய அணி வீரர் பும்ராவுடன் வாக்குவாதத்தில் ஆஸ்திரேலிய வீரர் கான்ஸ்டாஸ் ஈடுபட்ட நிலையில் அதற்கு உடனடியாக பும்ரா பதிலடி கொடுத்த நிகழ்வை ஒட்டமொத்த இந்திய ரசிகர்களும் கொண்டாடினர்.

இந்தியா பேட்டிங்...

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணிக்கு பும்ரா தலைமை தாங்கினார். இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பண்ட் 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலன்ட் 4 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 3 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 9 ரன்கள் அடித்துள்ளது. கான்ஸ்டாஸ் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார். கவாஜா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பும்ரா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

வாக்குவாதத்தில்... 

முன்னதாக முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை பும்ரா வீச தயாரானபோது பேட்ஸ்மேன் கவாஜா ரெடியாகவில்லை. இதனால் பும்ரா ஏதோ கூறியவாறு பந்து வீச முயற்சித்ததை நிறுத்தி பின்னால் சென்றார். ஆனால் பவுலிங் முனையிலிருந்த சாம் கன்ஸ்டாஸ் பும்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே கள நடுவர் உள்ளே புகுந்து இருவரையும் சமாதானம் செய்தார். இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அடுத்த பந்தை (6-வது பந்து) வீசிய பும்ரா கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தி பதிலடி கொடுத்தார். இதனை ஒட்டுமொத்த இந்திய அணியும் வெறித்தனமாக கொண்டாடியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து