முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பரிசுத் தொகுப்பைபெற, வீடு வீடாக தமிழகம் முழுவதும் டோக்கன் விநியோகிக்கும் பணி துவக்கம் : வரும் 13-ம் தேதி வரை வழங்க ஏற்பாடு

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      தமிழகம்
Ration-shop

Source: provided

சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி  நேற்று முதல் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது. இந்த டோக்கன் விநியோகம் வரும் 13-ம் தேதி வரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலவர் அறிவிப்பு...

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என முதலவர் ஸ்டாலின் அறிவித்தார்.  

வரும் 13-ம் தேதி வரை... 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் பணி நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணி வரும் 13-ம் தேதி வரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ஏதுவாக நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 

கலெக்டர்கள் ஆய்வு... 

சேலம் மாவட்டம் விநியோகிக்கும் பணி குறித்து, சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பொங்கல் பரிசு வழங்குவதற்கு விரிவான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்களில் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் பொங்கல் பரிசுத்தொகை சிரமம் இன்றி பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சி தெரிவித்தார். தொடர்ந்து வீடு வீடாக சென்று குடும்ப அட்டையை பெற்று ஆய்வு செய்து அதற்கான டோக்கனையும் அவர் நேரடியாக வழங்கினார். இதுபோல் தமிழகம் முழுவதும் டோக்கன் விநியோகிக்கும் பணி குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து