முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறது: பா.ஜ.க மீது ராகுல் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      இந்தியா
Rahul 2024-05-27

Source: provided

டெல்லி : அரசுப் பணியாளர் தேர்வு மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜக சீரழிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பிகாரில் டிசம்பர் மாதம் நடைபெற்ற அரசுத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக தேர்வர்கள் தேர்வைப் புறக்கணித்து, போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மீது குற்றம் சாட்டியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது ``ஏகலைவனைப்போல இந்திய இளைஞர்களின் கட்டைவிரலை வெட்டி, அவர்களின் எதிர்காலத்தை பாஜக அழித்து வருகிறது. அரசுப் பணியாளர் ஆள்சேர்ப்பில் தோல்வி ஏற்பட்டிருப்பது மறுக்கமுடியாத அநீதி.

முதலாவதாக, ஆள்சேர்ப்பு அறிவிக்கப்படவில்லை. ஆள்சேர்ப்பு அறிவிக்கப்பட்டாலும், தேர்வுகள் சரியான நேரத்தில் நடத்தப்படுவதில்லை; தேர்வுகள் நடைபெற்றாலும், வினாத்தாள்கள் கசிந்துவிடும். இதுகுறித்து இளைஞர்கள் நீதி கேட்கும்போது, அவர்களின் குரல் இரக்கமின்றி நசுக்கப்படுகிறது. இந்த முறைகேடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த இரண்டு மாணவர்கள் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களின் உரிமைகளுக்கான குரலை ஒடுக்கும் பாஜகவை அனுமதிக்க மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

பிகாரில் 900-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் முதல் நிலைத் தேர்வு டிச. 13ஆம் தேதி நடைபெற்றது. ஏறக்குறைய ஐந்து லட்சம் விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுதினர். இதில் வினாத்தாள்களை குறிப்பிட்ட மையங்களிம் மட்டும் தாமதமாகக் கொடுத்தது உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தி வந்தனர். மாநில அரசைக் கண்டித்தும் தேர்வாணையத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், டிச. 30ஆம் தேதி ஆணையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. பிகார் அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து பாட்னாவில் உள்ள காந்தி திடலில் தேர்வர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து