முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரத்தில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை பலி

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      தமிழகம்
Pudukottai 2023 07 01

Source: provided

விழுப்புரம் : விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் விளையாட்டின்போது கழிவுநீர்த் தொட்டியின் இரும்பு மூடி உடைந்ததால், உள்ளே விழுந்த குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்த மூன்றரை வயது பெண் குழந்தை லியா லெட்சுமி, நேற்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கழிவுநீர்த் தொட்டியினுள் விழுந்தார். கழிவுநீர்த் தொட்டியின் இரும்பு மூடி உடைந்து, லியா லெட்சுமி உள்ளே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது. இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதியினர் பள்ளியை முற்றுகையிட்டும், தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடவும் முயற்சித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து