முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் பேரணி செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைதாகி விடுதலை

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      தமிழகம்
Khushpu 2023-10-04

Source: provided

மதுரை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, பா.ஜ., மகளிர் அணி சார்பில்  நீதி கேட்பு போராட்டம் நேற்று  மதுரையில் நடந்தது. இதில், குஷ்பூ உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று மதுரை செல்லாத்தம்மன் கோவிலில் இருந்து சென்னை வரை பா.ஜ., சார்பில் நீதி கேட்பு பேரணி நடத்தப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பா.ஜ.,வின் நீதி கேட்பு பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் மதுரையில் இருந்து பா.ஜ., பேரணி உறுதியாக துவங்கும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று பா.ஜ., மாநில மகளிரணி தலைவர் உமாரதி தலைமையில், கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். தொண்டர்கள் மத்தியில்  குஷ்பூ பேசினார். பின்னர் போலீசார் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற, குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர். அப்போது பா.ஜ.,வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. பிறகு அவர்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் குஷ்பு கூறியதாவது: இது எங்களுக்கு கிடைத்த வெற்றி. ஆட்டுக்குட்டிகள் இருந்த இடத்தில் எங்களை அடைத்து வைத்திருந்தனர் . இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பா.ஜ.க., மகளிரணி சார்பாக நடந்த நீதிப் பேரணியில் கலந்து கொண்ட, மாநில மகளிரணித் தலைவி உமாரதி, மொடக்குறிச்சி சட்டசபை உறுப்பினர் சரஸ்வதி, தேசியச் செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மற்றும் மகளிரணி நிர்வாகிகளைக் போலீசார் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில், தி.மு.க.,வைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படும் தி.மு.க., அரசின் உண்மை முகம், பொதுமக்களிடையே அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து