முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துனிசியாவில் பயங்கரம்: 2 படகுகள் கவிழ்ந்த விபத்தில் 27 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      உலகம்
Bote 2023 08 13

Source: provided

துனிசியா : துனிசியாவில் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 83 பேர் மீட்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து அந்த நாட்டுத் தேசியப் பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது., கடந்த புதன்கிழமையன்று லிபியாவுடன், இத்தாலியில் உள்ள லம்பேடுசா தீவில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள துனிசியா, ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும்போது 2 படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். 83 பேர் மத்திய துனிசியாவில் உள்ள கெர்கென்னா தீவுகளில் மீட்கப்பட்டனர். இடம்பெயர்ந்த மக்கள் வட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று ஸ்ஃபாக்ஸ் நகரின் சிவில் பாதுகாப்புத் தலைவர் கூறியுள்ளார்.

இரண்டு படகுகளில் மொத்தம் 110 பேரை ஏற்றிச் சென்றதாகவும், படகுகளில் ஒன்று கவிழ்ந்தும், மற்றொன்று மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் 83 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.  மேலும், படகில் காணாமல் போனவர்களைக் கடலோரக் காவல்படையினர் அந்தப் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து