முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனிப்பட்ட விமர்சனங்களில் விரும்பவில்லை: பிரதமர் நரேந்திர மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      இந்தியா
Kejriwal 2024-02-17

Source: provided

புதுடில்லி : நான் தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபட விரும்பவில்லை. துஷ்பிரயோக அரசியல் செய்ய மாட்டேன்,'' என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டில்லியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசுகையில், ஆம் ஆத்மி அரசை விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு பதிலளித்து கெஜ்ரிவால் பேசியதாவது: பிரதமரின் 43 நிமிட பேச்சில் 39 நிமிடங்கள் மட்டும் டில்லி மக்களையும், அவர்களின் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்ட அரசையும் விமர்சித்து உள்ளார். 2015 ல் டில்லி மக்கள் இரண்டு அரசை தேர்வு செய்தனர். மத்தியில் பா.ஜ., தலைமையிலான அரசையும், டில்லிக்கு ஆம் ஆத்மி தலைமையிலான அரசையும் தேர்ந்தெடுத்தனர். 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், ஆம் ஆத்மி அரசு செய்த பணிகள் குறித்து கேட்டால், அதற்கு பதிலளிக்க 2 -3 மணிநேரங்கள் போதாது.

நான் தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபட விரும்பவில்லை. துஷ்பிரயோக அரசியல் செய்யவில்லை. 10 ஆண்டுகளில் அவர்கள் பணியாற்றி இருந்தால், தற்போது அவர்கள் டில்லி மக்களை விமர்சித்து இருக்க மாட்டார்கள். வேலை செய்து இருந்தால் அவர்கள் விமர்சிக்க மாட்டார்கள். வேலை செய்யாதவர்கள் மட்டுமே அடுத்தவர்களை விமர்சித்து தேர்தலை சந்திப்பார்கள். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து