முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேல் ரத்னா விருது: குகேஷ் கருத்து

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      விளையாட்டு
Gugesh-Neboniyaach

Source: provided

விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா, விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குகேஷ் கூறியதாவது, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் எனக்கும் எனது சாதனைகளை அங்கீகரிக்கவும் மதிப்புமிக்க மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதை அறிவித்ததை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். 

இந்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் இந்த விருது 2025-ம் ஆண்டில் இன்னும் கடினமாக உழைக்க மற்றும் நாட்டிற்காக அதிக விருதுகளை அடைய என்னை ஊக்குவிக்கும்.என தெரிவித்தார் . 

______________________________________________________________________________________

ரிஷப் குறித்து கவாஸ்கர் 

ரிஷப் பண்ட்டை விமர்சித்ததற்கான காரணம் பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு:- "உண்மையில் இந்த விளையாட்டும் இந்திய கிரிக்கெட்டும்தான் என்னை உருவாக்கியது. எனவே ரிஷப் பண்ட் போன்ற திறமையானவர் அப்படி அவுட்டானதை பார்த்தது ஏமாற்றமாக அமைந்தது. அதற்கு முந்தைய பந்தில் அவர் விளையாடியதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அடுத்த பந்தில் அவர் அப்படி அவுட்டானதற்கு ஈகோதான் காரணம். டெஸ்ட் போட்டிகள் அவ்வளவு சுலபமல்ல. அவருக்காக இரண்டு புறங்களிலும் ஆஸ்திரேலியா பீல்டர்களை நிறுத்தி இருந்தது. அது தெரிந்தும் ரிஷப் பண்ட் தன்னுடைய விக்கெட்டை கொடுத்தார்.

இதற்கு முன் அவர் அற்புதமான ஆட்டங்களை விளையாடி நான் பார்த்துள்ளேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் இப்படி அடித்தால்தான் ரன்கள் அடிக்க முடியும் என்று அவர் சிந்திப்பது போல் தெரிகிறது. அவர் இறங்கி சென்று பந்தை தூக்கி அடித்து பவுண்டரிக்கு அனுப்ப முயற்சிக்கிறார். ஆனால் கடந்த காலங்களில் அவர் அப்படி மட்டுமே விளையாடவில்லை. கவர் ட்ரைவ், ஸ்கொயர் கட், புல் ஷாட், பிளிக் ஆப் போன்ற அனைத்து வகையான ஷாட்டுகளும் அவரிடம் இருக்கிறது. ஒருவேளை அந்த பந்து சிக்சர் போயிருந்தால் நானே அவரை பாராட்டியிருப்பேன். ஆனால் அங்கே நீங்கள் கொஞ்சமும் கவலையின்றி பேட்டை சுழற்றி அவுட்டானீர்கள்" என்று கூறினார்.

______________________________________________________________________________________

போலண்ட் புதிய மைல்கல்

சிட்னி டெஸ்ட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் தனது 50 ஆவது விக்கெட்டினை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்தியாவின் பேட்டர்கள் ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, நிதீஷ்குமார் ஆகியோரது விக்கெட்டினை எடுத்து போலண்ட் அசத்தினார். அதிலும் கடந்த டெஸ்ட்டில் சதமடித்த நிதீஷ்குமார் ரெட்டியை கோல்டன் டக்கவுட் ஆக்கி அசத்தினார். ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகவே ஸ்காட் போலண்டுக்கு வாய்ப்பு கிடைத்தது. பிங்க் பந்தில் விளையாடிய போலண்ட் மீண்டும் அடுத்த டெஸ்ட்டில் ஹேசில்வுட் விளையாடியதால் நீக்கப்பட்டார். பின்னர் ஹேசில்வுட் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறவே இவருக்கு இடம் உறுதியானது.

கிடைக்கும் வாய்புகளில் எல்லாம் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார் போலண்ட். நடப்பு பார்டர் - கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளார். 3 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ள போலண்ட் தனது சிறந்த பந்துவீச்சாக 4/31 எடுத்துள்ளார். தனது 13 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிறந்த பந்துவீச்சாக 6/7 இருக்கிறது.  இந்தியாவுக்கு எதிராக மட்டும் 5 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

______________________________________________________________________________________

சிட்னி  ஆடுகளம் குறித்து ரிஷப் 

முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடாதது குறித்து ரிஷப் பந்த் பேசியதாவது: இந்த இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடும் விதமான வாய்ப்புகள் அமையவில்லை. ஏனெனில், ஆடுகளம் அதிரடியாக ஆடுவதற்கு ஏற்றாற்போல் இல்லை. அணியின் நிலையும் அதிரடியாக விளையாடுவதற்கு ஏற்ற நிலைமையில் இல்லை. சில நேரங்களில் மிகவும் பாதுகாப்பாக விளையாட வேண்டியிருக்கும். 

குறிப்பாக, ஆடுகளங்கள் விளையாடுவதற்கு மிகவும் சவாலானதாக இருக்கும்போது, பாதுகாப்பாக விளையாட வேண்டும். நான் ஆட்டமிழந்தால் அடுத்து இரண்டு மூன்று விக்கெட்டுகள் உடனடியாக ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்துவிடும். அதனால், நான் அதிரடியாக விளையாடவில்லை என்றார். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாட முயன்று இரண்டு இன்னிங்ஸ்களிலும் முக்கியான தருணத்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து