எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பெரியார் நடத்திய போராட்டங்கள் யாராலும் 'காப்பி' அடிக்க முடியாத போராட்டங்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று சட்டப்பேரவையில் விதி எண்: 110-ன் கீழ், பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தி.மு.க. முதன்முறையாக 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, 'இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை' என்று அண்ணா அறிவித்தார். ஆறாவது முறை ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க. அரசு, பெரியாரின் அறிவுச்சுடரைப் போற்றும் விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை விதி எண் 110-ன்கீழ் வெளியிடுவது என் வாழ்வில் கிடைத்தற்கரிய நல்வாய்ப்பு என்பதை எண்ணி மகிழ்கிறேன்.
ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணியைச்செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்' என்று அறிவித்துக்கொண்டு, 95 வயது வரை மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு இந்த இனத்துக்காக, நாட்டுக்காகப் போராடியவர்தான் பெரியார்.
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்பதையே அடிப்படையாகக் கொண்டு சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பெரியார் மானமும் அறிவும் உள்ள மனிதர்களாக ஆக்குவதற்கு அறிவுலக ஆசானாக இந்த நாட்டை வலம் வந்தார். அவர் நடத்திய போராட்டங்கள் யாராலும் 'காப்பி' அடிக்க முடியாத போராட்டங்கள்; அவர் எழுதிய எழுத்துகள் யாரும் எழுதத் தயங்கும் எழுத்துகள்; அவர் பேசிய பேச்சுகள், யாரும் பேசப் பயப்படும் பேச்சுகள்; தமிழர் நலமெல்லாம் தன்னுடைய நலமாகக் கருதினார்; தமிழர்க்கு எதிரானது எல்லாவற்றையும் தனது எதிரியாகக் கொண்டு எதிர்த்திருக்கிறார். அவர் நடந்த நடை, அவர் நடத்திய சுற்றுப்பயணங்கள், அவர் நடத்திய மாநாடுகள், அவர் நடத்திய போராட்டங்களைச் சொல்லத் தொடங்கினால், இந்த அவையையே பத்து நாட்களுக்கு ஒத்திவைத்துப் பேச வேண்டும்.
'மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை; ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்' - இவை இரண்டும்தான் அவரது அடிப்படைக் கொள்கைகள். சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு ஆகிய இரண்டும்தான் அவரது இலக்குகளாக இருந்திருக்கின்றன. அந்த இரண்டுக்கும் எவையெல்லாம் தடையாக இருக்குமோ, அவை அனைத்தையும் கேள்வி கேட்டார்; அறிவியல்பூர்வமாகக் கேள்வி கேட்டார்; தன்னைப் போலவே சிந்திக்கத் தூண்டினார்.
அவரது சுயமரியாதைச் சிந்தனையால் தமிழினம் சுயமரியாதைச் சிந்தனையைப் பெற்றது; அவர் உருவாக்கிய பகுத்தறிவின் கூர்மையால் தமிழினம் சிந்தனைத் தெளிவு பெற்றது. சாதியால் அடக்கி ஒடுக்கப்பட்ட மனிதர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் மேன்மையை அடைவதற்கான சமூக நீதிக் கதவைத் திறந்து வைத்தது அவரது கைத்தடியே ஆகும். தமிழகத்துக்கு மட்டுமல்ல; இன்று இந்தியா முழுமைக்கும் சமூக நீதிக் கருத்துகள் விதைக்கப்பட்டுள்ளன என்றால், அதற்கு அவர் போட்ட அடித்தளமே காரணம்.
நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாத அவரால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் முதலாகத் திருத்தம் செய்யப்பட்டது. சட்டப்பேரவைக்குள் வர ஆசைப்படாத அவரது சிந்தனை கொண்ட சட்டங்கள் ஏராளமாக இந்த அவையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தனது சிந்தனையை அடுத்தவர் மூலமாகச் செய்ய வைக்கும் அபூர்வமான ஆற்றல் அவருக்குத்தான் இருந்தது.
'என் வாழ்வில் வசந்த காலம் என்பது பெரியாரோடு நான் இளைஞராக இருந்து வலம் வந்த காலம்தான்' என்று நம்மையெல்லாம் உருவாக்கிய அண்ணா சொன்னார்.
'பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்'என்று எழுதினார் கருணாநிதி.
அண்ணாவும் கருணாநிதியும் உருவான குருகுலம் பெரியாருடைய குருகுலமாகும். இந்தக் குருகுலத்துப் பயிற்சிதான் தி.மு.க.வை உருவாக்கி, அரசியல் புரட்சிகரக் கருத்துகளைத் தமிழகத்தில் விதைத்து, ஆட்சிக்கு வந்து அதே கொள்கையை நிறைவேற்றி வரும் அந்தக் காட்சியை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இது உலகில் எந்த சீர்திருத்த இயக்கத்துக்கும் கிடைக்காத புகழாகும். சீர்திருத்தவாதிகள் பேசிவிட்டுப் போயிருப்பார்கள்; ஆட்சியாளர்களுக்கு அதன் வாசனையே இருக்காது. தமிழகத்தில் மட்டும்தான் ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் இயக்கமாக மாறி, அந்த இயக்கம் சீர்திருத்தக் கருத்துகளை நடைமுறைப்படுத்தி, சட்டமாகவும் ஆக்கி அந்தச் சமுதாயத்தை மேன்மை அடைய வைத்திருக்கிறது.
அவரால் கல்வி பெற்றவர்கள், அவரால் வேலைவாய்ப்பைப் பெற்றவர்கள், அவரால் அதிகாரத்தைப் பெற்றவர்கள், அவரால் பெண்ணினம் அடைந்த வளர்ச்சிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்த எழுச்சிகள் ஆகியவற்றுக்கு இன்றைய தமிழகமே சாட்சி. இந்த விதை பெரியார் போட்ட விதை; அண்ணா அதற்கு எருவூட்டினார்; கருணாநிதி வளர்த்தார். அதனை மாபெரும் விருட்சமாகக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூக நீதி, இன உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கொள்கையைப் பெரியார் உருவாக்கினார். அதுதான் கடந்த நூற்றாண்டில் இந்தச் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது; எதிர்காலத்துக்குப் பாதை அமைத்துத் தரப்போகிறது.
இந்த உணர்வை, உணர்ச்சியை, எழுச்சியை, சிந்தனையை விதைக்கும் அடையாளமாக பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாளை ஆண்டுதோறும் 'சமூக நீதி நாள்' ஆகக் கொண்டாடுவது என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. பெரியாரின் அறிவு வெளிச்சத்தில் வளர்ந்த நாம், நமது நன்றியின் அடையாளமாக இந்த நாளைக் கொண்டாடுவோம்; சாதிய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமைக் கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறித் தள்ளுவோம்; பெண்களைச் சமநிலையில் மதிப்போம். அந்த எண்ணத்தை விதைக்கும் விதமாக இந்த உறுதிமொழியைத் தயாரித்துள்ளோம். ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ஆம் நாளன்று தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் கீழ்க்கண்ட உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்வோம்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் -
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்
எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமைத் திறனும்-பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும்!
சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!' என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம்.
பெரியார் மறைந்தபோது, 'பெரியார் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார், நாம் தொடர்வோம்' என்றார் அன்றைய முதல்வர் கருணாநிதி. எனவே, நாம் தொடர்வோம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
சபரிமலை கோயில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரம்
04 Jan 2025கேரளா, சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி சட்டமன்ற தேர்தல்: முதல்வர் அதிஷிக்கு எதிராக காங். வேட்பாளர் அறிவிப்பு
04 Jan 2025டெல்லி, டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் முதல்வர் அதிஷியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-
குறைந்த பந்தில் அரைசதம்: விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்தார் ரிஷப் பண்ட்
04 Jan 2025BOX - 1
சிட்னி : குறைந்த பந்தில் அரைசதம் அடித்த விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார்.
-
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆதாரங்களை கைப்பற்றிய சிறப்புக்குழு
04 Jan 2025சென்னை : அண்ணா.
-
சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்: ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சடலமாக மீட்பு
04 Jan 2025ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் ரூ.120 கோடி சாலை திட்டத்தில் முறைகேடு நடந்ததை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ஒருவர் செப்டிக் டேங்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர
-
புதிய வைரஸ் தொற்று குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம்: சீனா அரசு அறிவிப்பு
04 Jan 2025சீனா, புதிய வைரஸ் தொற்று குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று சீனா அரசு அறிவித்துள்ளது.
-
மணிக்கு 180 கி.மீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்த வந்தே பாரத் ரெயில் : மத்திய அமைச்சர் பகிர்ந்த வீடியோ வைரல்
04 Jan 2025புதுடில்லி : மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் சென்ற வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டத்தின் போது, ஒரு டம்ளர் தண்ணீர் ஆடாமல் அசையாமல் இருந்த வீடியோவை, சமூகவலைதளத்தில் மத்திய
-
காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து வீரர்கள் 4 பேர் பலி
04 Jan 2025ஸ்ரீநகர் : காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 4 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 வீரர்கள் காயமடைந்தனர்.
-
பாலியல் வழக்கை திசை திருப்ப முயற்சி: காவல்துறைக்கு அண்ணாமலை கண்டனம்
04 Jan 2025சென்னை : பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளதாக&nb
-
முத்தமிழ் முருகன் மாநாட்டு மலரை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
04 Jan 2025சென்னை : பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
04 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகைக்கு ஜன.17-ம் தேதியும் சேர்த்து மொத்தம் 6 நாட்கள் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
சிட்னி டெஸ்ட் 2-ம் இன்னிங்ஸில் இந்திய அணி மீண்டும் தடுமாற்றம்: 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள்
04 Jan 2025சிட்னி : சிட்னி டெஸ்ட்டின் 2-ம் நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
-
உங்களுக்கு ரத்தம், எங்களுக்கு தக்காளி சட்னியா: குஷ்பு கேள்வி
04 Jan 2025சென்னை : தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் போது உங்களுக்கு வந்தால் மட்டும் ரத்தம், எங்களுக்கு தக்காளி சட்னியா என்று தி.மு.க.,வுக்கு நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்ள
-
ஆஸ்திரேலியாவில் அதிக விக்கெட்: ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை
04 Jan 2025சிட்னி : இந்திய அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா, பிஷன் பேடியின் 46 ஆண்டுகால சாதனையை ஆஸ்திரேலியாவில் முறியடித்துள்ளார்.
-
தமிழகத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயல் தீவிர இயற்கை பேரிடர் : அரசிதழில் வெளியிட்டு தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jan 2025சென்னை : தமிழகத்தில் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவர் தேர்தல்: காரைக்குடி எம்.எல்.ஏ.வின் மனைவி வெற்றியை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்
04 Jan 2025புதுடெல்லி, சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவர் தேர்தலில் வெற்றிப்பெற்ற காரைக்குடி எம்.எல்.ஏ.வின் மனைவி பெற்ற வெற்றியை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து அவருக்கு எதிரான மனுவை தள்
-
விண்வெளியில் தாவர வளர்ப்பு சோதனை முயற்சியில் வெற்றி: இஸ்ரோ முக்கிய அறிவிப்பு
04 Jan 2025புதுடெல்லி, விண்வெளியில் தாவர வளர்ப்பு சோதனை முயற்சியில், விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
-
பொள்ளாச்சியில் சோகம்: தனியார் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
04 Jan 2025பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் தனியார் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோப்பையை தக்கவைக்க வேண்டும்: வீரர்களுக்கு ரோகித் அறிவுரை
04 Jan 2025சிட்னி : வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் என இந்திய அணிக்கு ரோகித் சர்மா அறிவுரை வழங்கியுள்ளார்.
விளையாடவில்லை...
-
பெண்களின் தாலியை திருடுவதா? மத்திய அரசு மீது காங். விமர்சனம்
04 Jan 2025டெல்லி, பெண்களின் தாலியை மோடி தலைமையாலான மத்திய அரசு திருடுவதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
ஒரே மாதிரி 8 முறை கோலி அவுட்
04 Jan 2025முன்னதாக இந்த இன்னிங்சில் விராட் கோலி 6 ரன்னில் போல்ண்ட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதுவும் அவுட் சைடு ஆப் ஸ்டம்புக்கு சென்ற பந்தை தொட்டு ஆட்டமிழந்தார்.
-
உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்
05 Jan 2025நியூயார்க் : போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் புத்தாண்டில் உலக பெரும் கோடீஸ்வரராக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் திகழ்கிறார்.
-
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு முன்பதிவு இன்று தொடங்குகிறது
05 Jan 2025மதுரை : மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
-
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது
05 Jan 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஜன.13ல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
-
'முபாசா-தி லயன் கிங்' திரைப்படம்: உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்து புதிய சாதனை
05 Jan 2025நியூயார்க் : முபாசா : தி லயன் கிங் திரைப்படம் உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.