முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      தமிழகம்
EPS 2024-04-10

Source: provided

சென்னை : சட்டப்பேரவையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம்  ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது குறித்து அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்  தெரிவித்துள்ள கருத்துகள், பிறப்பித்துள்ள உத்தரவுகள், நீட் குறித்த முறைகேடுகள்  அம்பலம், நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்கள் நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பது, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கம், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு என தொடர்ச்சியான நிகழ்வுகள் சொல்கின்ற செய்தி   நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதுதான். 

38 எம்.பி.க்களை வைத்துக் கொண்டு நீட் தேர்வு ஒழிப்புக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத தி.மு.க., தற்போது 40 எம்.பி.க்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு குறித்த தீர்மானத்தை கொண்டு வராமல், மீண்டும் 3-வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதால் என்ன பயன்?

இந்த தீர்மானம் தி.மு.க. அரசின் மற்றுமொரு அரசியல் நாடகம்.  நீட் தேர்வை நாடாளுமன்றம் மூலம் மறுபரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது. நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை வருகின்ற நாடாளுமன்ற  கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன்.

ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வு ஒழியும் வரை அ.தி.மு.க.வின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து