முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கணினி மூலம் குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      தமிழகம்
Vikravandi 2024-06-28

Source: provided

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரிவதற்கான தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணினி மூலம் குலுக்கல் முறையில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் பழனி தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித் சிங் பன்சால் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. இடைத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தற்போது வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரிவதற்கான வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் நடத்தப்பட்டது.

மொத்தமுள்ள 276 வாக்குச்சாவடி மையங்களில், 331 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் – 1. 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -2, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -3, 31 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் 4 என மொத்தம் 1,355 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்புதிவு நிலை அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து