முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊடுருவல் அதிகரிப்பு; அமித்ஷாவின் பேச்சுக்கு வங்கதேச அரசு கண்டனம் : இந்திய தூதருக்கு அவசர கடிதம்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      உலகம்
Bangladesh 2024-03-24

Source: provided

டாக்கா : ஜார்கண்டில் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சுக்கு, வங்கதேச இடைக்கால அரசு பதிலடி கொடுத்து, இந்திய தூதருக்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா கடந்த சில தினங்களுக்கு முன் பேசுகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி செய்யும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி அரசு, வாக்கு வங்கி அரசியலுக்காக சட்டவிரோத ஊடுருவலை (வங்கதேசத்தினர்) ஊக்குவிக்கிறது. இவ்விஷயத்தில் கவனம் செலுத்தப்படாவிட்டால், சட்டவிரோதமாக ஊடுருவிய நபர்கள் அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளில் மாநிலத்தின் பெரும்பான்மை மக்களாக மாறி விடுவார்கள்.  

அவர்கள் நம்முடைய பெண்களை திருமணம் செய்து கொண்டு, நிலத்தையும், பழங்குடியினரின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் அழித்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் தூக்கி எறிவோம். ஊடுருவல் காரணமாக சந்தால் பர்கானாவில் மட்டும் பழங்குடியின மக்கள் தொகை 44 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக குறைந்துள்ளது என்று கூறியிருந்தார். 

அமித்ஷாவின் கருத்துக்கு வங்கதேச இடைக்கால அரசு பதில் அளித்துள்ளது. இதுதொடர்பாக வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ளது இந்திய தூதரிடம் அவசர கடித குறிப்பு ஒன்றையும் அனுப்பி உள்ளது. அதில், 

எங்களது குடிமக்களுக்கு எதிராக இந்திய தலைவர்களின் பேச்சுகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இது தொடர்பாக இந்திய அரசையும் தொடர்பு கொண்டுள்ளோம். வங்கதேச மக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை இந்திய தலைவர்கள் தவிர்க்க வேண்டும். 

எனவே வங்கதேசத்தினருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகளை தவிர்க்குமாறு தனது தலைவர்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து