முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று செவ்வாய்கிழமை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ.7,000-க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 56,000-க்கும் விற்பனையானது.

கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22-ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அதன் விலை அன்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்து ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்து இருக்கிறது. 

சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் (செப்.1) தங்கம் விலை கிராம் ரூ.6,695-க்கும், சவரன் ரூ.53,560-க்கும் விற்பனையானது. தொடா்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், கடந்த செப்.20-இல் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,885-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,080-க்கும் விற்பனையானது. செப்.21-இல் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,960-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கும் விற்பனையாகி தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று புதிய உச்சமாக ரூ. 56,000-க்கு விற்பனையானது.  வெள்ளிவிலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.98,000-க்கும் விற்பனையானது. கடந்த 5 நாள்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.175-ம், சவரனுக்கு ரூ.1,400-ம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து