முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை பாப்பம்மாள் மறைவு: பிரதமர் மோடி புகழஞ்சலி

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      இந்தியா
Modi 2024-03-28

Source: provided

புதுடெல்லி : உடல்நலக்குறைவால் மறைந்த பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இயற்கை விவசாயியுமான கோவையைச் சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாளுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

பாப்பம்மாள் மறைவால் ஆழ்ந்த துயரம் அடைந்தேன். இயற்கை வேளாண் துறையில் அவர் முத்திரை பதித்தார். அவருடைய அன்பும், எளிமையும் மக்களை ஈர்த்தது. அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி எனக் குறிப்பிட்டுள்ளார்.

 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் என்ற ரங்கம்மாள். 108 வயதான இவர், கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயம் செய்து வந்தார். 

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த இவர் ஆற்றி வந்த சேவைகளை பாராட்டி, மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு மூதாட்டி பாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கி கவுரவப்படுத்தியது. 

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க.வின் முப்பெரும் விழா நடந்தது. இதில் தி.மு.க. சார்பில் பெரியார் விருது மூதாட்டி பாப்பம்மாளுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து