முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடிதம்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      இந்தியா
Rahul 2024-09-09

Source: provided

புதுடெல்லி : தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

செப்டம்பர் 21 அன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். 

அக்கடிதத்தை மயிலாடுதுறை எம்.பி சுதா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அக்கடிதத்தில் “செப்டம்பர் 21, அன்று 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதையும், அவர்களின் படகுகளை இலங்கை அதிகாரிகள் கைப்பற்றியது தொடர்பாகவும் உங்களுக்கு எழுதுகிறேன். மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா என்னிடம் கூறியதாவது.,  

கைது செய்யப்பட்ட மீனவர்கள் சம்பவத்தன்று ஆபத்தில் சிக்கிய இலங்கைப் படகை மீட்க முயன்றனர். அப்போது மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக இலங்கை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போதிலும், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டியதாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படடு பெரும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் பேசி மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து