முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தாவில் நீடிக்கும் போராட்டம்: மாநில அரசுக்கு நாளை வரை ஜூனியர் டாக்டர்கள் கெடு

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      இந்தியா
Doctor 2024-10-08

Source: provided

கொல்கத்தா : கொல்கத்தாவில் 15-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள் நாளை 21-ம் தேதிக்குள்  ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு  போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ம் தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. 

இந்த சம்பவத்தைக் கண்டித்து உரிய நீதி வேண்டி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த டாக்டருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜூனியர் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர்களின் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த நிலையில், செப். 16-ம் தேதி மருத்துவக் குழுவுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் அதில் டாக்டர்கள் கோரிக்கை முழுமையாக ஏற்கப்படவில்லை. 

இதனால் டாக்டர்கள் போராட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாறியது. நேற்றுடன் 15-வது நாளாக ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இதுவரை 6 டாக்டர்கள் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வரும் 21-ம் தேதிக்குள் மாநில அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து 8 டாக்டர்கள் தற்போது காலவரையற்ற உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 22-ம் தேதி மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து