முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2024      விளையாட்டு
Australia 2024-02-06

Source: provided

மெல்போர்ன் : பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் கடைசி 2 ஆட்டங்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணம்... 

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆடி வருகிறது. இதில் 3 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

வரும் 26-ம் தேதி... 

இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி வரும் 26-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய இரு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரரான நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாம் கான்ஸ்டாஸ் இடம் பிடித்துள்ளார்.

காயம் காரணமாக...

மேலும், இந்த அணியில் காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் இடம் பெறவில்லை. அதேசமயம் அணியில் ஜை ரிச்சர்ட்சன், பியூ வெப்ஸ்டர், சீன் அப்போட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த அணிக்கு கேப்டனாக பேட் கம்மின்ஸூம், துணை கேப்டன்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி: 

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், சீன் அப்போட், ஸ்காட் போலண்ட், பியூ வெப்ஸ்டர், ஜை ரிச்சர்ட்சன், நாதன் லயன்.

இளம் வீரர்கள் சேர்ப்பு

ஆஸ்திரேலிய அணியில் நாதன் மெக்ஸ்வீனி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சாம் கொன்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். நாதன் மெக்ஸ்வீனி தொடக்க வீரராக முதல் டெஸ்ட்டில் அறிமுகமாகினார். சாம் கொன்ஸ்டாஸ், சீன் அப்பாட், பியூ வெப்ஸ்டர், ஜோஷ் இங்கிலிஷ், ஜாய் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய 19 வயது சாம் கொன்ஸ்டாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கொன்ஸ்டாஸ் கடந்த அக்டோபர் 2இல் 19 வயதை கடந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து