எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நல்லகண்ணு வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோமே அதுதான் பெருமை என்றும், “இயக்கத்துக்காகவே இயக்கமாகவே வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய மாமனிதர் நல்லகண்ணு என்றும், அவருக்கு கம்பீரமான செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நல்லகண்ணு குறித்த 'நூறு கவிஞர்கள் - நூறு கவிதைகள்' என்ற கவிதை நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: நூற்றாண்டு விழா நாயகராக இருக்கக்கூடிய நல்லகண்ணுவின் புகழை, சிறப்பை, அவர் தியாகத்தை இன்றைக்கு போற்றிக் கொண்டிருக்கிறோம். சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கான நம்முடைய பணியில் வெல்வதற்காக வாழ்த்துங்கள் என்று கேட்க வந்திருக்கிறோம்! உங்கள் வாழ்த்தைவிட எங்களுக்குப் பெரிய ஊக்கம் எதுவும் கிடைத்துவிட போவதுமில்லை.
பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்திருக்கிறது.100 வயதைக் கடந்து நமக்கு வழிகாட்டியும், தமிழ்ச் சமுதாயத்துக்காக இன்னும் உழைக்கத் தயாராக இருக்கிறேன் என்றும், உள்ள உறுதியோடு இங்கே அமர்ந்திருக்கக்கூடிய அவருக்கு கம்பீரமான வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கம்பீரமான வணக்கம் மட்டுமல்ல, கம்பீரமான செவ்வணக்கத்தையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்லகண்ணுவின் 80-வது பிறந்த நாள் விழாவில் பங்கெடுத்துக் கொண்டு வாழ்த்திய கலைஞர் கருணாநிதி, “வயதால் எனக்குத் தம்பி; அனுபவத்தால் எனக்கு அண்ணன்”, “என்னைவிட வயதால் இளையவர், ஆனால், அனுபவத்தாலும், தியாகத்தாலும் நம்மையெல்லாம் விட மூத்தவர்” என்று குறிப்பிட்டார். “நல்லகண்ணு வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோமே அதுதான் பெருமை”.
அவர் தாய் காவியம் தீட்டியபோது, அதற்கு நல்லகண்ணுவிடம்தான் அணிந்துரை வாங்கினார். அப்படிப்பட்ட தோழமையை இறுதி வரை பேணிப் பாதுகாத்தார். அந்த நட்புணர்வுடன் தான், கொள்கை உறவோடு தான் இன்றைக்கு நான் உங்களை வாழ்த்தவும் - வாழ்த்துப் பெறவும் வந்திருக்கிறேன்.
நல்லகண்ணுவுக்கு, அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கினார் கலைஞர். நான் 2022-இல் தகைசால் தமிழர் விருதை வழங்கினேன், இதுதான் எனக்கு கிடைத்த பெருமை. அண்ணல் அம்பேத்கர் விருதை பெறும்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதில் ஐம்பதாயிரத்தை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இன்னொரு ஐம்பதாயிரத்தை விவசாய சங்கத்திற்கும் கொடுத்துவிட்டார்.
இப்போது நான், தகைசால் தமிழர் விருது கொடுத்தபோது, அப்போது 10 லட்சம் ரூபாயை தந்தோம். அந்த 10 இலட்ச ரூபாயை மட்டுமல்ல, அதனுடன் 5 ஆயிரம் ரூபாயைச் சேர்த்து, பத்து லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசுக்கே நிவாரண நிதியாக அளித்தார். அவரின் 80-வது பிறந்தநாளின்போது, அன்றைய இந்தியக் கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், பொருளாளர் எம்.எஸ்.தாவீதும், ஒரு கோடி ரூபாயைத் திரட்டித் தந்தார்கள். அந்த ஒரு கோடி ரூபாயையும் மேடையிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கே கொடுத்துவிட்டார். அதே மேடையில், கார் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்தக் காரையும் இயக்கத்திற்காக கொடுத்துவிட்டார்.
இவ்வாறு, இயக்கம் வேறு, தான் வேறு என்று நினைக்காமல், இயக்கத்திற்காகவே, இயக்கமாவே வாழ்ந்துகொண்டு இருக்கக்கூடிய மாமனிதரை நினைத்து பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியுமா? கட்சிக்காகவே உழைத்தார்! உழைப்பால் வந்த பணத்தையெல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார். அதனால்தான் வரலாற்றில் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறார்! எப்படிப்பட்ட வரலாறு அவருடையது? நினைத்துப் பார்க்கிறேன்.
1925-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் நாள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது! அதே ஆண்டு அதே மாதத்தில் 26-ஆம் நாள் நல்லகண்ணு பிறக்கிறார். அந்த வகையில், ஒரு இயக்கமும் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது; அந்த இயக்கத்தின் மாபெரும் தலைவரும் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார். திராவிட இயக்கத்திற்கும், பொதுவுடமை இயக்கத்திற்குமான அரசியல் நட்பு இடையிடையே விடுபட்டிருக்கலாம். ஆனால், கொள்கை நட்பு என்பது எப்போதும் எந்த சூழ்நிலையிலும் தொடரும். அது தொடரக்கூடியது.
இரண்டு இயக்கங்களுக்குமான நட்பு என்பது, கொள்கை நட்பு. தேர்தல் அரசியலைத் தாண்டியது இந்த நட்பு! சாதியவாதம், வகுப்புவாதம், பெரும்பான்மைவாதம், எதேச்சாதிகாரம், மேலாதிக்கம் ஆகிய அனைத்திற்கும் எதிராக, ஜனநாயகச் சக்திகள் ஒற்றுமையுடன் பணியாற்றுவதுதான் அவருக்கு நாம் வழங்கும் நூற்றாண்டு விழா பரிசாக அமைந்திட முடியும். அத்தகைய ஒற்றுமையையும், ஒரே சிந்தனையும் கொண்டு, அவரின் வழித்தடத்தில் நாமும் நடப்போம். நூற்றாண்டு கண்டுவிட்ட தோழர் நல்லகண்ணு இன்னும் பல்லாண்டுகள் வாழ்க! வாழ்க! எங்களை வழிநடத்துக! என்று கேட்டு, என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 5 days ago |
-
அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை அரசு கைவிட பிரேமலதா கோரிக்கை
03 Jan 2025சென்னை: அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.
-
சீனாவில் வேகமாக பரவும் புதிய வகை வைரஸ் தொற்று மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் கூட்டம்
03 Jan 2025பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தோன்றி 5 ஆண்டுகளுக்கு பின் ஹெச்.எம்.பி.வி என்ற புதிய வைரஸ் தொற்று பரவல் காரணமாக அங்கு மருத்துவமனைகள், தகன மேடைகள் நிரம்பி வழிவதாக அதிர்ச்சி தக
-
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்
03 Jan 2025மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
-
தமிழகத்தில் கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய ரேசன் கடைகள் திறப்பு
03 Jan 2025சென்னை : கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
-
அமலாக்கத் துறை சோதனை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு
03 Jan 2025சென்னை: அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் 203 சுடுகாடுகளில் குப்பைகள் - செடிகள் அகற்றம்
03 Jan 2025சென்னை: சென்னையில் 203 சுடுகாடுகளில் மாநகராட்சி ஊழியர்களால் குப்பைகள் - செடிகள் அகற்றப்பட்டன.
-
அதானி குழுமத்திற்கு எதிரான வழக்கு: வழக்குகளை கூட்டாக விசாரிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
03 Jan 2025நியூயார்க்: இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிரான 3 கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க நியூயார்க் நீதிமன
-
அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக பயன்படுத்தும் மத்திய அரசு: முத்தரசன் கண்டனம்
03 Jan 2025சென்னை : அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக பயன்படுத்தும் மத்திய அரசு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
-
ஜனாதிபதியாக பதவியேற்கும்முன் ஜனவரி 19-ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்த டிரம்ப் திட்டம்
03 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும்முன் பிரமாண்ட பேரணி நடத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
அமெரிக்க அதிபர், மனைவி பெற்ற பரிசு பொருட்கள் விவரம் வெளியீடு : பிரதமர் மோடி வழங்கிய வைரத்தின் மதிப்பு அதிகமாம்
03 Jan 2025அமெரிக்க : அமெரிக்க அதிபருக்கும் அவரது மனைவிக்கும் பரிசு பொருட்கள் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
-
விழுப்புரத்தில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை பலி
03 Jan 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் விளையாட்டின்போது கழிவுநீர்த் தொட்டியின் இரும்பு மூடி உடைந்ததால், உள்ளே விழுந்த குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த
-
மதுரையில் பேரணி செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைதாகி விடுதலை
03 Jan 2025மதுரை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, பா.ஜ., மகளிர் அணி சார்பில் நீதி கேட்பு போராட்டம் நேற்று மதுரையில் நடந்தது.
-
சபரிமலையில் 2,569 ஏக்கரில் அமையும் விமான நிலையம் ஆய்வு அறிக்கை வெளியீடு
03 Jan 2025கோட்டயம்: சபரிமலை விமான நிலையம் 2,569 ஏக்கரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
தடையை மீறி பா.ஜ.க.யாத்திரை: மதுரையில் நடிகை குஷ்பு கைது
03 Jan 2025மதுரை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரையில் தடையை மீறி நீதி யாத்திரை செல்ல முயன்ற நடிகை குஷ்பு உள்பட 500-க்கும் மேற்பட்ட பாஜக மகளிர்
-
பொங்கல் பரிசுத் தொகுப்பைபெற, வீடு வீடாக தமிழகம் முழுவதும் டோக்கன் விநியோகிக்கும் பணி துவக்கம் : வரும் 13-ம் தேதி வரை வழங்க ஏற்பாடு
03 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி நேற்று முதல் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டத
-
சிட்னி டெஸ்ட்டில் மீண்டும் தடுமாற்றம்: முதல் இன்னிங்சில் இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட்
03 Jan 2025சிட்னி : சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் இந்திய வீரர்கள் மீண்டும் சொதப்பியதன் காரணமாக முதல் இன்னி
-
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறது: பா.ஜ.க மீது ராகுல் குற்றச்சாட்டு
03 Jan 2025டெல்லி : அரசுப் பணியாளர் தேர்வு மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜக சீரழிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
கடைசி போட்டியில் விலகல்: ரோகித் சர்மா முடிவு குறித்து பும்ரா, ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி
03 Jan 2025சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் முடிவு குறித்து வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் இருவரும் பேசியுள்ளனர்.
-
அலங்காநல்லூர் - பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: முகூர்த்தக்காலை நட்டு பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி
03 Jan 2025மதுரை: அலங்காநல்லூர் - பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு வாடிவாசல், பார்வையாளர்கள் அமருவதற்கு கேலரிகளை அமைக்க முகூர்த்தக்காலை நட்டு பணிகளை அமைச்சர் மூர்த்தி நேற்
-
கூட்டத்தில் சிக்கி ரசிகை உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன்
03 Jan 2025ஐதராபாத் : புஷ்பா 2 படம் பார்க்க ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
-
ராகுல் மீதான வழக்கில் விசாரணை
03 Jan 2025சுல்தான்பூர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூர் வழக்கில் மனுதாரரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.
-
கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம்: ராமதாஸ் கண்டனம்
03 Jan 2025சென்னை : சிறுமியின் உயிரிழப்பு காரணமான தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
-
295-வது பிறந்த தினம்: வேலுநாச்சியார் படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை
03 Jan 2025சென்னை: வேலுநாச்சியாரின் 295-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று த.வெ.க. தலைவர் விஜய் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
துனிசியாவில் பயங்கரம்: 2 படகுகள் கவிழ்ந்த விபத்தில் 27 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
03 Jan 2025துனிசியா : துனிசியாவில் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
தண்டனை காலம் நிறைவடைந்த 183 கைதிகளை உடனே விடுவிக்க பாக்.கிற்கு இந்தியா வலியுறுத்தல்
03 Jan 2025டெல்லி: தண்டனை காலம் நிறைவடைந்த நிலையில் பாகிஸ்தான் சிறைகளில் உள்ள மீனவர்கள் உள்ளிட்ட 183 இந்திய கைதிகளை விடுவிக்க