எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி: படிப்புக்கு மட்டும் அல்ல,மாணவிகளுக்கு எந்தத் தடை வந்தாலும் அதை உடைப்பேன் என்று தூத்துக்குடி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும், ஒரு ஆண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது கல்வி வளர்ச்சி. ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூகப் புரட்சி என்றும் அவர் தெரிவித்தார்.
மதிப்பெண் வாங்குவதில் தமிழ்நாட்டு பெண்கள் டாப். நாட்டிலேயே உயர்கல்வியில் அதிகம் சேர்வதில் தமிழ்நாட்டு பெண்கள்தான் டாப். வேலைக்கு செல்வதிலும் தமிழ்நாடு பெண்கள் டாப். இதுதான் பெரியார் கண்ட கனவு.” என்று தூத்துக்குடியில் நடந்த புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கி வைத்தார் . இந்த திட்டத்தால் 75,028 மாணவிகள் பயனடைவார்கள்.
திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஆயிரக்கணக்கான மாணவிகளை ஒரே இடத்தில் பார்க்கும் போது ஒரு பெருமையடைகிறேன். இதற்கு நேர் எதிராக ஸ்டாக் ஒன்று இருக்கு. அது சாதி, மதம் என நம்மை பிரிக்கும் ஸ்டாக். வளர்ச்சியை பற்றி சிந்திக்காமல் வன்முறையை தூண்டிவிடும் வன்மம் பிடித்த ஸ்டாக். பெண்கள் வீட்டில்தான் இருக்க வேண்டும் என்ற மனுவாத சிந்தனையை இந்த காலத்திலும் பேசிக்கொண்டு இருக்கும் காலவதியான ஸ்டாக்.
மதிப்பெண் வாங்குவதில் தமிழ்நாட்டு பெண்கள் டாப். நாட்டிலேயே உயர்கல்வியில் அதிகம் சேர்வதில் தமிழ்நாட்டு பெண்கள்தான் டாப். வேலைக்கு செல்வதிலும் தமிழ்நாடு பெண்கள் டாப். இதைத்தான் தந்தை பெரியார் நினைத்தார். அனைத்து மக்களுக்கும் கட்டாயக் கல்வி சட்டத்தைக் கொண்டு நீதிக்கட்சி கொண்டு வந்தது. பட்டியலின மாணவர்களை அனைத்துப் பள்ளிகளிலும் சேர்க்க நீதிக்கட்சி உத்தரவிட்டது. கல்விக்கான ஏராளமான முன்னெடுப்புகளை நீதிக்கட்சி மேற்கொண்டது. காமராஜர் ஆட்சியில் அதிகப்படியான பள்ளிகள் தொடங்கப்பட்டது. 1967ல் அண்ணாவின் அரசியல் புரட்சி பல்வேறு மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.
அதன்பின்னர், கலைஞர் கல்லூரிக் கல்வியில் அதிகப்படியான கவனம் செலுத்தினர். அவர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் 97 கல்லூரிகளைத் திறந்தார். அந்த வழித்தடத்தில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள திராவிட மாடல் அரசு கொண்டு வருகிறது. கல்லூரி, உயர் கல்வி, ஆராய்ச்சிக் கல்விக்கும் திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் தருகிறது.
கட்டணமில்லா இலவசப் பயணத் திட்டத்தால் இதுவரை 527 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி. ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை என பல திட்டங்களை பெண்களுக்கு திராவிட மாடல் அரசு வழங்குகிறது. இந்த வரிசையில் தான் புதுமைப் பெண் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுவதால், கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை விகிதம் கூடுகிறது என்ற புள்ளிவிவரத்தை ஆய்வறிக்கையில் படித்து மகிழ்ந்தேன். திட்டத்தினை உருவாக்கிய நோக்கம் நிறைவேறியதாக பெருமை அடைந்தேன்.
மாணவிகளின் படிப்புக்கு மட்டும் அல்ல, வேறு எந்தத் தடை வந்தாலும் அதை நான் உடைப்பேன். இந்த திட்டமெல்லாம் மாணவிகளுக்கு மட்டும்தானா மாணவர்களுக்கு இல்லையா? என்ற கேள்வி எழுந்தததைத் தொடர்ந்து நிதிச் சிக்கல்களையும் மீறி ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை மாணவர்களுக்காக தொடங்கினோம். உயர் கல்வி திட்டத்துக்கு எந்த நெருக்கடி இருந்தாலும் அதை கண்டு கொள்ளாது நலத்திட்டங்களை செயல்படுத்துவது என்று தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கினோம்.
ஒரு ஆண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது கல்வி வளர்ச்சி. ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூகப் புரட்சி. புதுமைப் பெண் திட்டத்தால் உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகரிக்கும். அறிவுத்திறன் கூடும். திறமைசாலிகள் உருவார்கள். அதன் காரணமாக தமிழகத்தில் தொழில் தொடங்க ஏராளமான வெளிநாட்டவர் இங்கே வருவார்கள். பாலின சமத்துவம் கூடும். குழந்தை திருமணம் குறையும். உயர் கல்வி கற்காத பெண்களே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்கும் வரை ஓய மாட்டேன். புதுமைப் பெண்களே படிங்க, படிங்க, படிங்க. படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
உங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்துதர நான் இருக்கிறேன். அரசு இருக்கிறது. இது போட்டி நிறைந்த உலகம். அதனால் ஒரு பட்டத்தோடு நிறுத்தாமல், மேற்கொண்டு படிங்கள். திருமணத்துக்குப் பின்னரும் வேலைக்குச் செல்லுங்கள். இன்று ரூ.1000 உதவி பெறும் நீங்கள், நாளை பலருக்கும் உதவி செய்ய வேண்டும். வழிகாட்ட வேண்டும். புதுமைப் பெண் திட்டத்தால் நான் இந்த உயரத்தை அடைந்தேன் என்று பின்னாளில் நீங்கள் யாரேனும் என்னிடம் சொன்னீர்கள் என்றால் அதுவே எனக்கான வெற்றி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-01-2025.
04 Jan 2025 -
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
04 Jan 2025விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியான சம்பவத்தில் விதிமீறி குத்தகைக்கு விட்டதால் விபரீதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
'ஸ்டாலின் மாடல்' என்பது அதிகார அடக்குமுறைக்கான 'பாசிச மாடல்' தி.மு.க. மீது அ.தி.மு.க. குற்றச்சாட்டு
04 Jan 2025சென்னை: 'ஸ்டாலின் மாடல்' என்பது அதிகார அடக்குமுறைக்கான 'பாசிச மாடல்' என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க., அதற்கு தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளின் வாக்குமூலங்களே சாட்சி என்றும
-
கே.பாலகிருஷ்ணனின் கோரிக்கையை நிச்சயம் தி.மு.க. ஆட்சி நிறைவேற்றும் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
04 Jan 2025சென்னை: திமுக ஆட்சியை பாராட்டிய கே.பாலகிருஷ்ணனுக்கு என்ன நெருடல்?.
-
சீனாவில் புதிய வகை வைரஸ் பரவல்: இந்தியாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய மத்திய அரசு
04 Jan 2025புதுடெல்லி: சீனாவில் புதிய வகை வைரஸ் பரவலை அடுத்து இந்தியாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
-
எரிவாயு லாரி கவிழ்ந்த விவகாரம்: டிரைவர் கைது - 6 பிரிவுகளில் வழக்கு
04 Jan 2025கோவை: கோவையில் சமையல் கியாஸ் எரிவாயு லாரி கவிழ்ந்ததில் டிரைவரை போலீசார் கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்பிற்கான தண்டனை அடுத்த வாரம் அறிவிப்பு
04 Jan 2025வாஷிங்டன்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பிற்கான தண்டனை விவரம் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.
-
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: தச்சங்குறிச்சியில் போட்டியை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
04 Jan 2025புதுக்கோட்டை: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் துவக்கி வைத்தனர்.
-
சென்னை மாரத்தான் ஓட்டம்: இன்று சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை இயக்கம்
04 Jan 2025சென்னை: சென்னையில் இன்று நடைபெற இருக்கும் மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் கிராமங்களை வளர்ச்சி மையங்களாக மாற்றுவதே நோக்கம் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
04 Jan 2025புதுடெல்லி: கிராமங்களில் உள்ள மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதே தனது அரசின் முன்னுரிமை என்றும் இந்தியாவில் கிராமங்களை வளர்ச்சி மையங்களாக மாற்றுவதே நோக்கம் என்று
-
கந்து வட்டி புகார் வழக்கு: நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை
04 Jan 2025குமரி: கந்து வட்டி புகார் வழக்கில் நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
டெல்லி சட்டசபை தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா
04 Jan 2025டெல்லி: டெல்லியில் முதல்வர் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன திருவிழா தொடக்கம்
04 Jan 2025சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
தங்க கடத்தியதாக மும்பை விமான நிலைய ஊழியர்கள் 2 பேர் கைது
04 Jan 2025மும்பை: தங்க கடத்தியதாக மும்பை விமான நிலைய ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குணமடைந்த சிறுமி டான்யாவுக்கு சொந்தமாக வீடு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
04 Jan 2025சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த ஆவடிசிறுமி டான்யாவுக்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின்சொந்தமாக வீடு
-
தனியார் பள்ளியில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியை வழங்கினார் அமைச்சர் பொன்முடி
04 Jan 2025விழுப்புரம்: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் பொன்முடி நேரில் வழங்கினார்.
-
பட்டாசு ஆலை பாதுகாப்பில் மெத்தனம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
04 Jan 2025சென்னை: பட்டாசு ஆலை பாதுகாப்பில் தொடர்ந்து தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டை சேர்நத பானி பூரி வியாபாரிக்கு ஜி.எஸ்.டி. நோட்டீஸ்
04 Jan 2025சென்னை: தமிழ்நாட்டை சேர்நத பானி பூரி கடை வியாபாரிக்கு ஜி.எஸ்.டி. நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
-
டெல்லி சட்டமன்ற தேர்தல்: முதல்வர் அதிஷிக்கு எதிராக காங். வேட்பாளர் அறிவிப்பு
04 Jan 2025டெல்லி, டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் முதல்வர் அதிஷியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-
குமரியில் 5-வது நாளாக தொடர்ந்த கடல் சீற்றம் படகு போக்குவரத்து ரத்து - பயணிகள் ஏமாற்றம்
04 Jan 2025கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் 5-வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதால் படகு போககுவரத்தும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
வேலூரில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
04 Jan 2025வேலூர்: வேலூரில் எம்.பி. கதிர் ஆனந்தின் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது.
-
கைதான ஞானசேகரன் வேறு ஒருவரிடம் பேசினார்: சிறப்பு விசாரணை குழுவிடம் தெரிவித்த பல்கலை. மாணவி
04 Jan 2025சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வேறு ஒருவரிடம் பேசினார் என்பதை சிறப்பு விசாரணை குழுவிடம் பாதிக்கப்பட்ட பல்கலை.
-
மின் அஞ்சல் மூலம் அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்
04 Jan 2025சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் 10-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை ஆய்வு மையம் தகவல்
04 Jan 2025சென்னை: தமிழகத்தில் வருகிற 10-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
04 Jan 2025சென்னை: 3 நாட்களாக அதிகரித்து வந்த ஒரு சவரன் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து விற்பனையானது.