எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக காவல்துறையில் உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் பதவி உயர்வு பெற்றனர். அதையொட்டி, பணியிட மாற்றமும் நடைபெற்றது. 56 பேர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
அதன்விவரம் பின்வருமாறு., ஜெயசந்திரன் - சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக உள்ள இவர், சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக மாற்றப்பட்டார். அன்பு - ஆவடி போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனரான இவர், ஈரோடு சிறப்பு அதிரடி படை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். தீபக் சிவாச் - விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், அரியலூர் போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்பார். ராஜாராம் - கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்பார். கிரண் ஸ்ருதி - ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், டி.ஜி.பி. அலுவலகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.
அபிஷேக் குப்தா - திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். சரவண குமார் - கோவை தெற்கு துணை கமிஷனராக உள்ள இவர், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தெற்கு மண்டல சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். செல்வராஜ் - அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக பொறுப்பேற்பார்.
ஆசிஷ் ராவத் - தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்பார். ஜெயக்குமார் - திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்பார். சீனிவாசன் - தென்காசி மாவட்ட சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், சென்னை பரங்கிமலை துணை கமிஷனராக மாற்றப்பட்டார். செல்வ நாகரத்தினம் - சென்னை பரங்கிமலை துணை கமிஷனராக பணியாற்றும் இவர், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்பார். டோங்கரே பிரவீன் உமேஷ் - சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், சென்னை லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.
சுந்தரவதனம் - கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், சென்னை 'கியூ' சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். ஈஸ்வரன் - சென்னை சைபர் பிரிவு (3) சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், திருச்சி நகர தெற்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டார். சசாங்க் சாய் - சென்னை கியூ பிரிவு சூப்பிரண்டாக உள்ள இவர், அமைப்பு சார்ந்த குற்ற புலனாய்வு பிரிவு சூப்பிரண்டாக பொறுப்பேற்பார். சரோஜ்குமார் தாக்குர் - சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக பணியாற்றும் இவர், சென்னை தலைமையக இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜயகுமார் - சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனராக பணியில் உள்ள இவர், சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக மாற்றப்பட்டார். மகேஷ்குமார் - சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பணியாற்றும் இவர், சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பொறுப்பேற்பார். மனோகர் - திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர், சென்னை வடக்கு இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
வருண் குமார் - திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று, திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சந்தோஷ் கடிமானி - சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனரான இவர், பதவி உயர்வு பெற்று, நெல்லை நகர கமிஷனராக மாற்றப்பட்டார். பண்டி காங்காதர் - சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பொறுப்பேற்பார். சசிமோகன் - ஈரோடு சிறப்பு அதிரடி படை சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று, கோவை சரக டி.ஐ.ஜி.யாக பதவி வகிப்பார்.
வந்திதா பாண்டே - புதுக்கோட்டை மாவட்ட சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். பகேரியா கல்யாண் - தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனராக பணியாற்றுவார். அவிநாஷ்குமார் - சென்னை டி.ஜி.பி. அலுவலக நிர்வாக பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர், தொழில் நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். பவானிஷ்வரி - டி.ஜி.பி. அலுவலகத்தில் எஸ்டாபிளிஷ்மென்ட் ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர், ஆவடி கமிஷனரகத்தில் தலைமையக மற்றும் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலகிருஷ்ணன் -கோவை போலீஸ் கமிஷனராக பணியாற்றும் இவர், டி.ஜி.பி. அலுவலகத்தில் நிர்வாக பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார். கார்த்திகேயன் - திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக உள்ள இவர், டி.ஜி.பி. அலுவலகத்தில் அமலாக்க பிரிவு ஐ.ஜி.யாக பதவியேற்பார். ஜெயஸ்ரீ - சென்னை செயலாக்க பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர், ஊர்காவல் படை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் ஏ.ஜி.பாபு - தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக உள்ள இவர், சென்னை ரெயில்வே ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார். மயில்வாகனன் - அமலாக்கத்துறை ஐ.ஜி.யாக உள்ள இவர் ஈரோடு சிறப்பு காவல்படை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார், .
ஜோஷி நிர்மல் குமார் - சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவு ஐ.ஜி.யாக உள்ள இவர், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். லட்சுமி - திருப்பூர் போலீஸ் கமிஷனராக பணியாற்றும் இவர், டி.ஜி.பி. அலுவலகத்தில் எஸ்டாபிளிஸ்மென்ட் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜேந்திரன் - சென்னை ஆவடி கமிஷனரகத்தில் தலைமையக கூடுதல் கமிஷனராக பணியாற்றும் இவர், திருப்பூர் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். ரூபேஷ்குமார் மீனா - நெல்லை நகர போலீஸ் கமிஷனராக பணியாற்றும் இவர், சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பேற்கிறார். சரவண சுந்தர் - கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, கோவை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரவேஷ் குமார் - சென்னை வடக்கு இணை கமிஷனராக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார். கயல் விழி - சென்னை தலைமையக இணை கமிஷனராக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்றுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் உள்பட 56 பேர் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-01-2025.
04 Jan 2025 -
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
04 Jan 2025விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியான சம்பவத்தில் விதிமீறி குத்தகைக்கு விட்டதால் விபரீதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
'ஸ்டாலின் மாடல்' என்பது அதிகார அடக்குமுறைக்கான 'பாசிச மாடல்' தி.மு.க. மீது அ.தி.மு.க. குற்றச்சாட்டு
04 Jan 2025சென்னை: 'ஸ்டாலின் மாடல்' என்பது அதிகார அடக்குமுறைக்கான 'பாசிச மாடல்' என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க., அதற்கு தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளின் வாக்குமூலங்களே சாட்சி என்றும
-
கே.பாலகிருஷ்ணனின் கோரிக்கையை நிச்சயம் தி.மு.க. ஆட்சி நிறைவேற்றும் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
04 Jan 2025சென்னை: திமுக ஆட்சியை பாராட்டிய கே.பாலகிருஷ்ணனுக்கு என்ன நெருடல்?.
-
சீனாவில் புதிய வகை வைரஸ் பரவல்: இந்தியாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய மத்திய அரசு
04 Jan 2025புதுடெல்லி: சீனாவில் புதிய வகை வைரஸ் பரவலை அடுத்து இந்தியாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
-
எரிவாயு லாரி கவிழ்ந்த விவகாரம்: டிரைவர் கைது - 6 பிரிவுகளில் வழக்கு
04 Jan 2025கோவை: கோவையில் சமையல் கியாஸ் எரிவாயு லாரி கவிழ்ந்ததில் டிரைவரை போலீசார் கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்பிற்கான தண்டனை அடுத்த வாரம் அறிவிப்பு
04 Jan 2025வாஷிங்டன்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பிற்கான தண்டனை விவரம் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.
-
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: தச்சங்குறிச்சியில் போட்டியை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
04 Jan 2025புதுக்கோட்டை: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் துவக்கி வைத்தனர்.
-
சென்னை மாரத்தான் ஓட்டம்: இன்று சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை இயக்கம்
04 Jan 2025சென்னை: சென்னையில் இன்று நடைபெற இருக்கும் மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கந்து வட்டி புகார் வழக்கு: நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை
04 Jan 2025குமரி: கந்து வட்டி புகார் வழக்கில் நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
இந்தியாவில் கிராமங்களை வளர்ச்சி மையங்களாக மாற்றுவதே நோக்கம் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
04 Jan 2025புதுடெல்லி: கிராமங்களில் உள்ள மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதே தனது அரசின் முன்னுரிமை என்றும் இந்தியாவில் கிராமங்களை வளர்ச்சி மையங்களாக மாற்றுவதே நோக்கம் என்று
-
டெல்லி சட்டசபை தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா
04 Jan 2025டெல்லி: டெல்லியில் முதல்வர் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன திருவிழா தொடக்கம்
04 Jan 2025சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
தங்க கடத்தியதாக மும்பை விமான நிலைய ஊழியர்கள் 2 பேர் கைது
04 Jan 2025மும்பை: தங்க கடத்தியதாக மும்பை விமான நிலைய ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குணமடைந்த சிறுமி டான்யாவுக்கு சொந்தமாக வீடு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
04 Jan 2025சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த ஆவடிசிறுமி டான்யாவுக்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின்சொந்தமாக வீடு
-
தனியார் பள்ளியில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியை வழங்கினார் அமைச்சர் பொன்முடி
04 Jan 2025விழுப்புரம்: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் பொன்முடி நேரில் வழங்கினார்.
-
டெல்லி சட்டமன்ற தேர்தல்: முதல்வர் அதிஷிக்கு எதிராக காங். வேட்பாளர் அறிவிப்பு
04 Jan 2025டெல்லி, டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் முதல்வர் அதிஷியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-
பட்டாசு ஆலை பாதுகாப்பில் மெத்தனம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
04 Jan 2025சென்னை: பட்டாசு ஆலை பாதுகாப்பில் தொடர்ந்து தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
குமரியில் 5-வது நாளாக தொடர்ந்த கடல் சீற்றம் படகு போக்குவரத்து ரத்து - பயணிகள் ஏமாற்றம்
04 Jan 2025கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் 5-வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதால் படகு போககுவரத்தும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
தமிழ்நாட்டை சேர்நத பானி பூரி வியாபாரிக்கு ஜி.எஸ்.டி. நோட்டீஸ்
04 Jan 2025சென்னை: தமிழ்நாட்டை சேர்நத பானி பூரி கடை வியாபாரிக்கு ஜி.எஸ்.டி. நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
-
கைதான ஞானசேகரன் வேறு ஒருவரிடம் பேசினார்: சிறப்பு விசாரணை குழுவிடம் தெரிவித்த பல்கலை. மாணவி
04 Jan 2025சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வேறு ஒருவரிடம் பேசினார் என்பதை சிறப்பு விசாரணை குழுவிடம் பாதிக்கப்பட்ட பல்கலை.
-
வேலூரில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
04 Jan 2025வேலூர்: வேலூரில் எம்.பி. கதிர் ஆனந்தின் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது.
-
மின் அஞ்சல் மூலம் அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்
04 Jan 2025சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் 10-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை ஆய்வு மையம் தகவல்
04 Jan 2025சென்னை: தமிழகத்தில் வருகிற 10-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
04 Jan 2025சென்னை: 3 நாட்களாக அதிகரித்து வந்த ஒரு சவரன் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து விற்பனையானது.