முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. விதிகளை பின்பற்ற தே.ஜ. கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை: கிரண் ரிஜ்ஜு தகவல்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2024      இந்தியா
Kiran-Rijiju 2023-01-16

புது டெல்லி, பாராளுமன்ற விதிகள், பாராளுமன்ற ஜனநாயக முறை மற்றும் நடத்தை ஆகியவற்றைப் பின்பற்றுமாறும், ஒரு நல்ல எம்.பி.யாக உருவாக இவை முக்கியம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியதாக  பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாராளுமன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே. பி. நட்டா, ஹெச்.டி. குமாரசாமி, சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

பிரதமர்  எங்களுக்கு ஒரு மந்திரத்தை அளித்துள்ளார். அது மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு எம்.பி.யும் தேசத்துக்குச் சேவை செய்யவே அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கட்சி வேறுபாடின்றி. நாட்டுக்கு சேவை செய்வதே நமது முதல் பொறுப்பு. இதில் ஒவ்வொருவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். 

தங்கள் தொகுதியின் விஷயங்கள், மற்ற முக்கிய விஷயங்களில் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, பாராளுமன்ற விதிகள், நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும் நடத்தை ஆகியவற்றைப் பின்பற்றுமாறும் நல்ல எம்.பி.யாக மாறுவதற்கு இவை அவசியம் என்றும் பிரதமர் கூறினார். இந்த மந்திரத்தை கடைபிடிக்க முடிவு செய்துள்ளோம்.

 மக்களவையில் ராகுல் காந்தி நடந்து கொண்ட விதம், சபாநாயகர் பக்கம் திரும்பி, விதிகளை மீறி பேசியது, சபாநாயகரை அவமதித்த விதம் அகியவற்றை பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் செய்யக்கூடாத ஒன்று எனவும் கிரண் ரிஜ்ஜூ கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 5 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து