முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு, அக்னி பாதை போன்றவை குறித்த ராகுலின் கருத்துகள் பாராளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2024      இந்தியா
Rahul 2024-06-28

புது டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நேற்று முன்தினம் அவையில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசினார்.  இந்தச் சூழலில் அவர் தெரிவித்த கருத்துகள் சில அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி  உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது பா.ஜ.க.வினர் குறித்தும், அக்னிபாதை திட்டம் குறித்தும் தனது கருத்துகளை ராகுல் கூறியிருந்தார். மேலும்  நீட் விவகாரம், விவசாயிகள் பிரச்சினை, அதானி மற்றும் அம்பானி குறித்தும் ராகுல் பேசி இருந்தார்.

இதற்கு ஆளும் பா.ஜ.க. தரப்பில் இருந்து பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.   

இந்த நிலையில் சிறுபான்மையின மக்களுக்கு பா.ஜ.க. அநீதி செய்கிறது,  அதானி, அம்பானி குறித்த விமர்சனம், நீட் தேர்வு மற்றும் அக்னிபாதை திட்டம் போன்றவை குறித்த ராகுலின் கருத்துக்கள்  அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

 இதே போல மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்த கருத்துகளும் நீக்கப்பட்டன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 5 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து