முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் மேல்முறையீடு மனு: சி.பி.ஐ. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2024      இந்தியா
Kejriwal 2023 04 14

புது டெல்லி, சி.பி.ஐ. கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக  கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு  குறித்து 7 நாளில் பதிலளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை ஜூலை1 7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான  கெஜ்ரிவாலை சி.பி.ஐ சமீபத்தில் கைதுசெய்தது.  இதற்கிடையே, சி.பி.ஐ. கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக  கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், கெஜ்ரிவால் மனு குறித்து 7 நாளில் பதிலளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை ஜூலை1 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை ஏற்கனவே கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 5 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து