முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: விரலில் மை வைக்கும் நடைமுறையில் மாற்றம் ஏதுமில்லை: தேர்தல் ஆணையம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2024      தமிழகம்
Vikravandi 2024-06-28

சென்னை, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குப் பதிவின் போது விரலில் மை  வைக்கும் நடைமுறையில் மாற்றம்  இல்லை என்றும், இடது ஆள் காட்டி விரலில் மக்களவை தேர்தலின்போது வாக்களித்த மை இருந்தால் வலது கை விரலில் மை வைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 10-ம்  தேதி நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.  இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.  அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடாததால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது கை விரலில் மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இடது ஆள் காட்டி விரலில் மக்களவை தேர்தலின்போது வாக்களித்த மை இருந்தால் வலது கை விரலில் மை வைக்கப்படும்.  மக்களவை தேர்தலின்போது இடது கை விரலில் வைக்கப்பட்ட மை அழியாமல் இருந்தால் வலது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 16 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 17 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து