முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டச்சு பொறியாளர்கள் உலகின் மிக நீளமான சைக்கிளை தயாரித்து புதிய கின்னஸ் சாதனை

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2024      உலகம்
Guinnes 2024-07-02

Source: provided

பெர்லின் : உலகிலேயே நீளமான சைக்கிளை 8 டச்சு பொறியாளர்கள் தயாரித்து சாதனை படைத்துள்ளனர். 180 அடி நீளமுள்ள இந்த சைக்கிள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெர்னி ரியான் என்பவர் தயாரித்த 155 அடி நீளமுள்ள சைக்கிள் தான் உலகிலேயே நீளமான சைக்கிள் என்ற சாதனையை படைத்திருந்தது.

டச்சு பொறியாளர்கள் குழுவில் இருந்த இவான் ஷால்க் என்ற 39 வயது பொறியாளர் தனது சிறு வயதில் இருந்தே இந்த நீளமான சைக்கிளை உருவாக்க வேண்டும் என்று கனவு கொண்டிருந்தார்.

அந்த கனவை இப்போது அவர் நனவாக்கியுள்ளார். உலகின் நீளமான சைக்கிள் என்ற சாதனை கடந்த 60 வருடங்களில் பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது. முதல்முதலாக 1965 ஆம் ஆண்டு ஜெர்மனியில் 26 அடி நீளத்தில் உலகின் முதல் நீளமான சைக்கிள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 5 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து