முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்களுக்கு எதிராக வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2024      தமிழகம்
Chennai-high-court2

சென்னை, புதிய குற்றவியல் சட்டங்களின் இந்திப் பெயர்களை அரசியலமைப்புக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி நேற்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

9 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே இந்தி அலுவல் மொழியாக உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

 பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக சுரக்க்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது அலுவல் மொழிச் சட்டம் 1963, தமிழ்நாடு அலுவல் மொழிச் சட்டம் 1956 இன் படி, அரசியலமைப்புக்கு எதிரானது என்று உத்தரவிட வேண்டும்.

இந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழிகளில் புதிய சட்டங்களுக்கு அரசு பெயரிட்டுள்ளது. நாட்டில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அவற்றில் 9 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே இந்தி அலுவல் மொழியாக உள்ளது. 56.37 இந்தியர்களுக்கு இந்தி தாய் மொழி இல்லை.

ஆகையால், அமைச்சரவை செயலகம், உள்துறை செயலகம் மற்றும் சட்டச் செயலகங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய உத்தரவிடவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.  

 மேலும்இந்தி மற்றும் சமஸ்கிருதம் தெரியாத சட்ட மாணவர்கள், சட்ட ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சட்ட அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தான் இந்த மனுவை தாக்கல் செய்ததாக ஆதித்யன் தெரிவித்தார். இந்த மனு விரைவில் ஐகோர்ட்டில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 5 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து